- Advertisement -

கந்த சஷ்டி நாளில் கோவிலுக்கு வாங்கித் தர வேண்டிய பொருட்கள்

- Advertisement -

முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமான விரதமாக திகழ்வது சஷ்டி விரதம். இதை வருடம் முழுவதும் கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள், ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய கந்த சஷ்டி திருவிழா சமயத்தில் கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஆறு நாட்களும் தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். தங்களுடைய உடல் சூழ்நிலை காரணமாகவும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் கடைசி நாள் மட்டும் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். விரதம் இருப்பவர்களாக இருந்தாலும், விரதம் இருக்காமல் வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் கடைசி நாள் அன்று முருகப்பெருமானுக்கு வாங்கி தர வேண்டிய பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கந்த சஷ்டி நாளில் கோவிலுக்கு வாங்கித் தர வேண்டிய பொருட்கள்

கந்த சஷ்டி திருவிழாவின் ஆறாவது நாள் தான் சூரசம்காரம் என்பது நடைபெறும். சூரனை வதம் செய்த நிகழ்வு அனைத்து முருகன் ஆலயத்திலும் நடைபெறுவது உண்டு. அன்றைய நாள் மட்டுமாவது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் அதீத பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.

- Advertisement -

தண்ணீரை மட்டுமே அருந்திக்கொண்டு விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது பால், பழம் போன்றவற்றை சாப்பிட்டுக்கொண்டு விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் சரி ஏதாவது ஒரு பொருளை முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு இந்த வழிபாட்டை தொடங்க வேண்டும். அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கி தர வேண்டும்.

அதிலும் குறிப்பாக பால், தயிர் வாங்கி தருவது வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்று கூறப்படுகிறது. தயிரை வாங்கி நாம் அபிஷேகத்திற்கு தருவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் சந்தனத்தை வாங்கி கொடுத்தால் தோல் நோய்கள் நீங்கும் என்றும், கண், காது, மூக்கு தொடர்பான நோய்களோ பிரச்சனைகளோ இருப்பவர்கள் அபிஷேகத்திற்கு தேன் வாங்கி தர வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அன்றைய தினத்தில் வீட்டில் நட்சத்திர கோலம் போட்டு புதிய அகல் விளக்கில் ஆறு நெய் தீபங்களை ஏற்றி முருகப் பெருமானை வழிபாடு செய்வதும், அதே போல் மாவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்வதும் நல்ல பலனை தரும். இந்த தீப வழிபாட்டை ஆலயத்திலும் நாம் மேற்கொள்ளலாம். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு நமக்கு என்ன தேவையோ அதை முருகப்பெருமானிடம் மனம் உருகி வேண்ட வேண்டும். இப்படி வேண்டுவதன் மூலம் அடுத்த கந்த சஷ்டிக்குள் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

இப்படி நாம் வழிபாடு செய்வதோடு அன்றைய தினத்தில் நம்மால் இயன்ற நபர்களுக்கு அன்னதானம் தருவதன் மூலம் நாம் வேண்டிய வரத்தை நம்மால் பெற முடியும். இந்த வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் நமக்கு ஆத்ம சுத்தி ஏற்பட்டு ஆத்ம பலம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்குரிய தைரியமும் தெளிவும் மனதிற்கு கிடைக்கும் என்றும் அவை அனைத்தையும் முருகப்பெருமான் அருள்வார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:எதிரிகளை பழி வாங்குவது எப்படி

முருகப்பெருமானை முழுமனதுடன் நம்பி விரதம் இருந்து அவருக்கு முன்பாக எந்த வேண்டுதலை முன் வைக்கிறோமோ, அந்த வேண்டுதல் விரைவிலேயே நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -