- Advertisement -
- Advertisement -

ஐப்பசி மாதம் அமாவாசை தினம் முடிந்த பிறகு கந்த சஷ்டி விரதம் என்பது ஆரம்பிக்கும். இது தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இருக்க வேண்டிய விரதமாகும். முருகப்பெருமானின் முக்கியமான விரதங்களில் ஒன்றாக திகழ்கிறது. சூரசம்ஹாரனை வதம் செய்வதற்காக மேற்கொண்டது தான் இந்த கந்த சஷ்டி விரதம். இந்த கந்த சஷ்டி விரதத்தில் நாம் விரதம் இருக்கும் பொழுது எப்படி உலகத்தை அழிக்க வந்த சூரசம்ஹாரனை முருகன் வதம் செய்தாரோ அதேபோல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும் முருகப்பெருமான் வதம் செய்வார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளும் நாட்களில் வீட்டிலேயே வேலை வைத்து எப்படி வழிபாடு செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கந்த சஷ்டி வேல் வழிபாடு

பொதுவாக கந்த சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள் பல விதங்களில் விரதங்களை மேற்கொள்வார்கள். ஒரு சிலர் இந்த ஆறு நாட்களும் மாலை அணிந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். வீட்டில் இருக்கும் பெண்களோ மாலை அணியாமல் ஆறு நாட்களும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் பாலும் பழமும் பருகி மட்டும் விரதம் இருப்பார்கள். இன்னும் சிலரும் மிளகும் தண்ணீரையும் வைத்து விரதம் இருப்பார்கள். தங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விரதம் மேற்கொள்ளும் முறையை பின்பற்றுவது அவர்களுடைய உடல் நலத்தை பாதுகாக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கந்தசஷ்டி விரதத்தில் வேலை வைத்து நாம் வழிபாடு செய்யும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

கந்தசஷ்டி விரதம் என்பது நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஆரம்பிக்கிறது. அன்றைய நாளில் புதிதாக ஒரு வேலை வாங்கிக் கொள்ளுங்கள். சிறிய அளவில் இருந்தால் கூட போதும். தினமும் காலையிலும், மாலையிலும் இந்த வேலிற்கு நம்மால் இயன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். குறிப்பாக பால், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், விபூதி போன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு ஒரு சிறிய சொம்பில் பச்சரிசி அல்லது விபூதியை நிரப்பி அதற்குள் வேலை வைத்து வேலைக்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

பிறகு மலர்களால் அலங்கரித்து வேல் விருத்தம் பாராயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். தினமும் அருகில் இருக்கக்கூடிய முருகனின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது பல நன்மைகளை தரும். இயன்றவர்கள் இந்த ஆறு நாட்களும் அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபாடு செய்வது அதீத பலனை தரும் என்றே கூறப்படுகிறது. ஆறு நாட்களும் வேலை வைத்து இந்த முறையில் அபிஷேகம் செய்து வேல் விருத்தம் பாடி வழிபாடு செய்பவர்கள், சூரசம்கார நாளன்று அந்த வேலை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று அந்த வேலை முருகப்பெருமானின் உண்டியலில் சமர்ப்பித்து விட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் முருகப்பெருமான் நீக்குவார் என்றும் நாம் வேண்டிய வரத்தை தருவார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:சஷ்டி விரதம் இருக்கும் முறை
இந்த எளிமையான வேல் வழிபாட்டை கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்கும் நாளிலிருந்து தொடர்ச்சியாக ஆறு நாட்கள் செய்பவர்களுக்கு வேலுண்டு வினையில்லை என்ற வார்த்தைக்கு இணங்க அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -