- Advertisement -

கந்த சஷ்டி விரத பலனை பெறும் வழிபாடு

- Advertisement -

கந்தசஷ்டி விரதம் என்பது மிகவும் சிறப்பான விரதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சிறப்பான விரதத்தை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கான நியமனங்கள் சற்று கடினமாகவே இருக்கும். ஒரு சிலர் வெறும் மிளகை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். இன்னும் சிலரோ திட உணவை தவிர்த்து விட்டு திரவ உணவுகளை எடுத்து விரதம் இருப்பார்கள். இன்னும் சிலரோ ஒருவேளை மட்டும் விரதம் இருப்பார்கள். இன்னும் சிலரோ எளிய உணவுகளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். எப்படி விரதம் இருந்தாலும் முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தாலேயே அந்த விரதத்திற்குரிய பலனை பெற முடியும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை சூழ்நிலை காரணமாக விரதம் இருக்க இயலவில்லை என்பவர் இந்த சிறப்பான விரதத்தின் பலனை பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கந்த சஷ்டி விரத வழிபாடு

இந்த வழிபாட்டை செய்பவர்கள் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்று இல்லை. அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும். அதேபோல் பெண்களுக்கு தீட்டு சமயமாக இருக்கக் கூடாது. இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது மாலை 5:30 மணிக்கு மேல் செய்யலாம். எந்த நேரத்தை தேர்வு செய்கிறோமோ அதே நேரத்தில் தான் தொடர்ச்சியாக ஆறு நாட்களிலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக சுத்தம் செய்து ஒரு நட்சத்திர கோலம் போட்டு அதற்கு நடுவே சரவணபவ என்னும் மந்திரத்தை எழுத வேண்டும்.

- Advertisement -

பிறகு கிழியாத நல்ல நிலையில் இருக்கும் ஆறு வெற்றிலைகளை எடுத்து அதன் காம்பு பகுதியை நீக்கி அதை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து ஒவ்வொரு முக்கோணத்திற்கு மேலே இந்த வெற்றிலைகளை வைக்க வேண்டும். பிறகு ஆறு அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி வைத்த பிறகு முருகப்பெருமானை முழு மனதோடு நினைத்து “ஓம் ரிங் சரவணபவ” என்னும் மந்திரத்தை 108 முறையும் “ஓம் சரவணபவ, ஓம் ரவணபவச, ஓம் வணபவசர, ஓம் ணபவசரவ, ஓம் பவசரவண, ஓம் வசரவணப” என்னும் முருகப்பெருமானின் சக்கோண மந்திரத்தை ஆறு முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நைவேத்தியமாக ஏதாவது ஒரு பொருளை முருகப்பெருமானுக்கு வைக்க வேண்டும். ஆறு நாட்களும் வெற்றிலையை புதிதாக மாற்ற வேண்டும். அகல் விளக்கில் ஆறு நாட்களும் புதிதாக நெய் மற்றும் திரியை மாற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி முருகப்பெருமானை ஆறு நாட்களும் எளிமையான முறையில் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: துயரங்களை தூர துரத்தும் சக்தி வாய்ந்த வழிபாடு

விரதம் இருந்த பலனை முழுமையாக பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எளிமையான வழிபாட்டு முறையை பின்பற்றி முழு பலனை பெறலாம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -