வாராகி அம்மன் சப்த கன்னிகளில் ஒருவராக திகழ்கிறார். வாராகி அம்மன் உருவத்தில் மாறுபட்டு இருந்தாலும், உள்ளத்தால் தாய்மை உணர்வு கொண்ட தெய்வம். துயர் என்று தன் முன் வந்து நிற்பவர்களின் துயரை காணாமல் போக செய்து விடக் கூடிய அற்புதமான தெய்வம் என்றால் அது வாராகி அம்மன் தான். இந்த வாராகி அம்மனை நினைத்து பஞ்சமி திதியில் நாம் செய்யும் ஒரு வழிபாடு நம்முடைய துயர் அனைத்தையும் நீக்கி விடும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அது என்ன வழிபாடு என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடன் அடைய வாராகி அம்மன் வழிபாடு
பிரச்சனை இல்லாத மனிதர்களே இன்று கிடையாது. ஒரு சிலர் வாழ்க்கையில் பிரச்சனையைத் தவிர வேறு ஒன்றுமே இருக்காது, நினைத்த காரியம் எதுவும் நடக்காது, வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சனையாகவே இருக்கும். இப்படி எந்த வகையிலும் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் பஞ்சமி திதியில் இந்த ஒரு சிறிய மூட்டையை கட்டி வாராகி அம்மனுக்கு வைத்து வழிபடும் போது அவை அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிப்பாட்டை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வளர்பிறை பஞ்சமி திதி வாராகி அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்த நாளில் அவரை வணங்கும் போது நம்முடைய வேண்டுதல் உடனே நடக்கும் என்று சொல்லப்படுகிறது. பஞ்சமி திதியில் வீட்டில் வாராகி அம்மன் படத்தை வைத்து வழிபடுபவர்கள் படத்திற்கு முன் ஒரு அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். படம் இல்லாதவர்கள் ஒரே ஒரு அகல் விளக்கை வாராகி அம்மனுக்காக ஏற்றி அந்த தீபத்தையே தாயாக நினைத்து இதை செய்யலாம்.
இவருக்கு நெய்வேத்தியமாக கிழங்கு வகைகளை படைக்கலாம். அல்லது கற்கண்டு சேர்த்து பாலை மட்டும் கூட நன்றாக காய்ச்சி வைத்து வழிபடலாம். அதே போல் இவருக்கு சிகப்பு நிறம் உள்ள பூக்கள் மிகவும் பிடிக்கும் எனவே செம்பருத்தி போன்ற மலர்களால் இவர்களுக்கு மாலை தொடுத்து போடலாம். நீங்கள் வெறும் விளக்கு வைத்து ஏற்றும் போது விளக்கின் அருகில் பூவை வைத்து விடுங்கள்.
இன்றைய தினத்தில் இவரை நினைத்து இந்த ஒரு முடிச்சை கட்டி வைக்க வேண்டும். இதற்கு முதலில் ஒரு பச்சை நிற சிறிய துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 3 ஏலக்காய் , 3 கிராம்பு, 3 மிளகு, 1 விரலி மஞ்சள், 1வசம்பு என அனைத்தையும் வைத்த பிறகு பச்சை நிற நூலால் இந்த முடிச்சை கட்டி விடுங்கள். இந்த முடிச்சை கட்டும் போது உங்களை பாடாய் படுத்தும் துயர் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இப்படி வேண்டிய பிறகு தாயாரிடம் உங்கள் கோரிக்கையை சொல்லி கண்ணீர் மல்க வேண்டி அவரின் படத்தின் அருகே இந்த மூட்டையை வைத்து விடுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு உங்கள் வீட்டின் அருகில் வாராகி அம்மன் கோவில் இருந்தால் அங்கு சென்று வணங்கி விட்டு வாருங்கள். ஒவ்வொரு நாளும் பூஜை செய்யும் போதும் இந்த முடிச்சிக்கு ஊதுவத்தி காட்டி அன்னையை நினைத்து மனதார பிராத்தனை செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி வேல் வழிபாடு
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து துயர் தீர்க்கும் வாராகி தாயாரை நினைத்து இந்த ஒரு வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்வில் இருக்கும் அனைத்து துன்பங்கள், துயரங்கள், கடன் பிரச்சனைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பலனை பெறலாம்என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.