
ஒரு குடும்பம் நல்ல நிலையில் செல்வ செழிப்போடு வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் அனைவரும் மனதிலும் தோன்றுவது அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். நல்ல செல்வ செழிப்பாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான். இந்த எண்ணமே அந்த குடும்பத்தை தாக்கி ஒன்றுமில்லாமல் செய்து விடும். அதற்காக எல்லோருடைய எண்ணமும் இப்படி செய்து விடும் என்று சொல்லுவதற்கு இல்லை.
ஒரு சிலர் இதை சொல்லும் போதே அவர்கள் மனதில் இவர்கள் மட்டும் இப்படி வாழ்கிறார்களே நமக்கு இது இல்லையே என்ற ஆதங்கமும் பொறாமையும் இருக்கும். இது போன்ற பார்வைகள் தான் நமக்கு துன்பத்தை ஏற்படுத்தும். சிலர் இந்த பார்வையுடன் அப்படியே கடந்து விடுவார்கள். இன்னும் சிலரோ அந்த சந்தோஷத்தை கெடுக்க வேறு தீய வழிகளையும் கையாளுவார்கள். அந்த கெட்ட கண் திருஷ்டியும் தீய எண்ணங்களையும் அழிக்க ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் சிறந்த ஒரு பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நாமே பார்த்திருப்போம் ஒருவர் கடன் வாங்கி கஷ்டப்பட்டு ஒரு வீட்டை கட்டியிருப்பார். அந்த வீட்டில் அனைவரும் அனைத்து சந்தோஷமாக கொண்டாடி இருப்பார். ஆனால் அந்த வீட்டில் அவர்கள் ஒரு நாளும் நிம்மதியாக இல்லாமல் துன்பப்படுபவர்கள். ஏன் ஒரு சிலர் அந்த வீட்டில் இருக்கவே முடியாத சூழ்நிலையும் இருக்கும் இவையெல்லாம் கூட இது போன்றதொரு காரணம் தான் என்று சொல்லப்படுகிறது.
செய்வினை தீய செயல்கள் கூட மெதுவாக தான் வேலை செய்யும். ஆனால் இந்த கண் திருஷ்டி உடனே வேலை செய்யும். ஒருவரை வேரோடு ஓழிக்க வேண்டும் எனில் இதை விட சிறந்த ஆயுதம் வேறு எதுவும் இல்லை என்பதும் நம் முன்னோர் வாக்கு. அப்படியான இந்த கண்திருஷ்டியை அழிக்க ஒரு துண்டு பரிகாரம் இருந்தால் போதும். இந்த எளிய பரிகாரத்தை செய்து விடலாம்.
இந்த பரிகாரத்தை வெள்ளி, செவ்வாய், ஞாயிறு இந்த மூன்று தினங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும். மற்ற நாட்களை இதற்கு பயன்படுத்த வேண்டாம். இந்த பரிகாரத்தை நீங்கள் உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் நின்று கொண்டு செய்யுங்கள். படிகாரத்தை கையில் வைத்து உங்களின் இடதுப்புறம் இருந்து வலது புறமாக ஒன்பது சுற்றும், வலது புறம் இருந்து இடது புறமாக ஒன்பது சுற்றும் சுற்றுங்கள்.
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் செய்யலாம் அல்லது அவரவர் தங்களுக்காகவே செய்து கொள்ளலாம். அதன் பிறகு வீட்டிற்கு வெளியே இந்த படிகாரத்தை கொண்டு சென்று விடுங்கள். பக்கத்தில் ஒரு பக்கெட்டில் தண்ணீரும் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கொட்டாங்குச்சியில் நெருப்பு மூட்டி அதில் இந்த பரிகாரத்தை காட்டுங்கள்.
படிகாரத்தை நெருப்பில் காட்டும் போது கையில் இடுக்கி போன்ற ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டு பிடியுங்கள் இல்லை என்றால் கையில் சூடு பட்டு விடும். நெருப்பில் காட்டிய இந்த படிகாரம் பொரிய ஆரம்பிக்கும். அப்படி பொரிந்த உடன் பக்கத்தில் இருக்கும் தண்ணீரில் இதை போட்டு விடுங்கள். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் இதை கொண்டு முக்கோடு சந்து என்று சொல்வார்கள் அங்கு ஊற்றுங்கள் இல்லை என்றால் கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:பணக்கஷ்டம் தீர தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டிய பொருள்
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பொழுது கண் திருஷ்டி தீய எண்ணங்கள் ஏன் நீங்கள் முன்னேறவே கூடாது என்று நினைத்து ஏதேனும் செய்திருந்தாலும் அவையும் இதன் மூலம் செயலிழக்கும் என்று சொல்லப்படுகிறது. கொடிய கண் திருஷ்டி வேரோடு அழித்து கட்ட இந்த ஒரு எளிய பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.