- Advertisement -
சமையல் குறிப்புகள்

நாவில் நீர் ஊறும் சுவையுடன் காரைக்குடி சிக்கன் குழம்பை உங்கள் வீட்டில் ஒரு முறை செய்து பாருங்கள். அக்கம் பக்கத்து வீட்டாரும், இன்று என்ன தடபுடலான விருந்து என்று கேட்பார்கள்.

- Advertisement -

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சமையல் முறையை பின்பற்றுகின்றனர். ஒவ்வொருவரும் அவரவருக்கென்று இருக்கும் கைப்பக்குவம், மற்றும் மசாலா அரைக்கும் பக்குவம் இவற்றை பொறுப்பு செய்யும் சமையலில் சுவை வேறுபடும். இவ்வாறு காரைக்குடியில் செய்யும் சிக்கன் குழம்பு மிகவும் காரமாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த காரைக்குடி சிக்கன் குழம்பை நீங்களும் சுவைக்க வேண்டும் என்றால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
கோழி கறி – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, காஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், கரம் மசாலா – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

தாளிக்க:
எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன்.

மசாலா அரைக்க:
தேங்காய் – அரை மூடி, கசகசா – அரை ஸ்பூன், முந்திரி – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் கோழிக் கறியை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை நன்றாக துருவி வைத்துவிட வேண்டும். அதன் பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு மிக்ஸியில் துருவிய தேங்காய் முந்திரி மற்றும் கசகசா அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு இவற்றைச் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும், அதன் பின் மிளகாய் தூள், கரம் மசாலா, மற்றும் மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து லேசாக வதக்கி கொண்டு, பின்னர் இவற்றுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி கடாயை மூடி தக்காளியை வேக விட வேண்டும்.

தக்காளி நன்றாக வெந்ததும் அதனுடன் சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி விட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும் பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை இவற்றுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அனைக்க வேண்டும். இப்பொழுது சுவையான காரைக்குடி சிக்கன் குழம்பு தயாராகிவிட்டது.

இவ்வாறு மசாலா அரைத்து ஒரு முறை நீங்களும் உங்கள் வீட்டில் இதனை முயற்சி செய்து பாருங்கள். இதன் வாசனையை வைத்தே பலரும் உங்களைக் கேட்டு விடுவார்கள் இன்று என்ன விசேஷம் சுவையான சமையல் வாசனை ஆளைத் தூக்குக்றதே என்று.

- Advertisement -