- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

நரை பிரச்சினையை சரி செய்யும் ஹேர் பேக்

இன்றைய காலத்தில் நரை முடி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டவுடன் நாம் கெமிக்கல் நிறைந்த ஹேர் டைகளை பயன்படுத்துகிறோம். என்னதான் கடையில் இருந்து பார்த்து பார்த்து வாங்கினாலும் கண்டிப்பான முறையில் அதில் ஏதாவது ஒரு கெமிக்கலாவது கலந்திருக்கும். அப்படி கெமிக்கல் நிறைந்த ஹேர் டை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உறுதி. இந்த நரைமுடி பிரச்சினையை சரி செய்வதற்கு அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு முக்கியமான பொருளைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

நரைமுடி என்றதும் அது இளநரையாக இருந்தாலும் சரி முதிர் நரையாக இருந்தாலும் சரி அதை கருமையாக மாற்றுவதற்கு அன்றைய காலத்தில் பயன்படுத்திய ஒரு கீரையை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த கீரையை நம்முடைய தலைமுடியில் தடவுவதன் மூலம் நரைமுடி கருப்பாவதோடு மட்டுமல்லாமல் முடிக்கு நல்ல வலுவை கொடுத்து ஆரோக்கியமான அடர்த்தியான முடியையும் வளரச் செய்யும். அந்த கீரை தான் வெள்ளை கரிசலாங்கண்ணி.

- Advertisement -

கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் இருக்கின்றது. வெள்ளை கரிசலாங்கண்ணி மஞ்சள் கரிசலாங்கண்ணி. இதில் பூக்கக்கூடிய பூக்களை வைத்து தான் நாம் வேறுபாடு செய்ய முடியும். வெள்ளை நிற பூக்கள் பூக்கும் கரிசலாங்கண்ணி மிகவும் அற்புதமான ஆற்றல் மிகுந்ததாக திகழ்கிறது. மஞ்சள் கரிசலாங்கண்ணி தான் அதிக அளவில் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணியை நாம் சொல்லிதான் வாங்கி வைக்க வேண்டும்.

அப்படி வெள்ளை கரிசலாங்கண்ணி கிடைக்கும் பட்சத்தில் நரைமுடி பிரச்சினை இருப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் தொடர்ச்சியாக உபயோகப்படுத்தும் பொழுது நரை முடி பிரச்சனை என்பது முற்றிலும் நீங்கிவிடும். நரைமுடி அல்லாத முடி உதிர்தலுக்காக பயன்படுத்துகிறோம் என்றால் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் போதும். சரி இந்த ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

ஒரு கட்டு வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையை வாங்கி வெறும் இலைகளை மட்டும் தனியாக உருவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இது கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று கைப்பிடி அளவு வரும். இதோடு சுத்தம் செய்யப்பட்ட ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் 15 செம்பருத்தி இலைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முதலில் மிக்ஸி ஜாரில் கரிசலாங்கண்ணி இலையைப் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து அந்த விழுதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே மிக்ஸி ஜாரில் கருவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலையை சேர்த்து நன்றாக அரைத்து அதையும் கரிசலாங்கண்ணி விழுதுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக்கூடாது. பிறகு இதனுடன் நாம் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான பொருளாக கருதப்படுவது தான் ஆமணக்கு எண்ணெய். மூன்று டீஸ்பூன் அளவிற்கு நாம் அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை நாம் தலையில் தடவுவதற்கு முன்பாக ஐந்து நிமிடம் தலையின் வேர்க்கால்களை நன்றாக மசாஜ் செய்துவிட்டு பிறகு வேர் கால்களில் படும் அளவிற்கு இந்த ஹேர் பேக்கை தடவி விட்டு பிறகு தலைமுடியின் நுனி வரை தடவ வேண்டும். பிறகு அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரம் வரை தலையில் அப்படியே வைத்துவிட்டு பிறகு எப்போதும் போல் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடலாம்.

குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாது என்று நினைப்பவர்கள் கால் மணி நேரம் மட்டும் ஊற வைத்தால் போதும். இந்த ஹேர் பேக்கை நம்முடைய தலையில் நாம் தடவுவதன் மூலம் நரை முடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். வேர்க்கால்கள் வலுவாக இருக்கும். முடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நின்று விடும். வழுக்கை விழுந்த இடத்தில் கூட புதிதாக முடி முளைக்க ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: தலை முடி பிரச்சனை தீர

மிகவும் அற்புதமான பலன்களை தரக்கூடிய இந்தக் கீரைகளை நம்முடைய தலையில் தடவுவதன் மூலம் நம்முடைய தலைமுடி ஆரோக்கியமாகவும் கருமையாகவும் இருக்கும்.

- Advertisement -