
நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட இடைப்பட்ட காரியங்களும் தடையில்லாமல் நிறைவேற செய்யக்கூடிய சக்தி இவருக்கு உண்டு. காலத்தின் ஸ்வரூபமாக இருக்கும் இவரின் அருள் இருந்தால், முக்காலத்தையும் வென்று காட்டலாம் என்பது ஐதீகம். தடைப்பட்ட காரியங்கள் வெற்றி அடைய செய்ய வேண்டிய எளிய பரிகாரம் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு விதமான குறிக்கோள்கள் இருக்கின்றன. அந்த குறிக்கோள்களுக்கு இடையே தடை போல வந்து நிற்கும் சில எதிர்பாராத விஷயங்கள்! அதிலிருந்து மீட்டெடுத்து நம் காரியங்களை வெற்றியாக்கி அருள் கொடுக்கக் கூடியவர் பைரவர். சிவ அம்சமாக திகழும் இந்த பைரவர் நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். தேய்பிறை அஷ்டமிகளில் பைரவருக்கு தொடர்ந்து மிளகு தீபம் ஏற்றி வருபவர்களுக்கு கடன் தொல்லை இருக்காது என்பார்கள்.
வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம், திடீரென தடை ஏற்பட்டு பாதியிலேயே கட்டுமான பணி நின்றுவிடும். மேற்கொண்டு வீட்டை கட்ட முடியாமல் தடைப்படும். திருமணம் முடிவாகி இருக்கும், ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் ஏதோ ஒரு காரணத்திற்காக தள்ளிக் கொண்டு செல்லும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தடைகள், எதிர்பார்த்த ஊதியம் கிடைப்பதில் தடைகள், எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடைகள் என்று எப்பேர்பட்ட தடைகள் நம் வாழ்க்கையில் இருந்தாலும், அவைகளை தகர்த்து எறிந்து வெற்றி தரக்கூடிய சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை எப்படி செய்வது? பார்ப்போம்.
பைரவருக்கு அஷ்டமி திதிகளில் பூஜைகள் செய்வது விசேஷம். வளர்பிறையை காட்டிலும், தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவது சிறப்பு பலன்களை கொடுக்கும். ஏழு தேய்பிறை அஷ்டமிகளில் வைரவருக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபட வேண்டும். உக்ர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது வழக்கம். பைரவருக்கும் எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுவார்கள்.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும், பைரவர் சன்னதிக்குச் சென்று அங்குள்ள பைரவருக்கு சிகப்பு நிற மலர்களை பாதத்தில் வையுங்கள். செவ்வரளி மலர்கள் ரொம்பவும் சக்தி உள்ளது. பின்னர் 21, 51 அல்லது 108 எலுமிச்சைகளை மாலையாக கோர்த்து பைரவருக்கு சாற்ற வேண்டும். நல்ல நிறம் உள்ள எலுமிச்சைகளை ஒன்று போல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா எலுமிச்சை பழங்களும் ஒரே அளவுகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை மாலையாக கோர்த்து பைரவருக்கு சாற்ற வேண்டும். எலுமிச்சை மாலையை சாற்றி, தடைகள் நீங்க மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, அகல் விளக்கில் நான்கு மிளகுகளை போட்டு தீபம் ஏற்றுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பிரதோஷம் நந்தி தேவர் மந்திரம்
இது போல ஏழு தேய்பிறை அஷ்டமிகளில் கோவிலுக்கு சென்று பைரவரை பிரார்த்தனை செய்து, எலுமிச்சை மாலை சாற்றி, பைரவரின் மந்திரங்களை உச்சரித்து வழிபட்டு வர வேண்டும். பைரவாவின் சன்னதியில் எலுமிச்சை பழம் ஒன்றை பிரசாதமாக கொடுத்தால், அதை வாங்கி வந்து வீட்டின் பூஜையறையில் வையுங்கள், ரொம்பவே நல்லது. கண் திருஷ்டிகள் அண்டாது, குடும்பத்தில் தீய சக்திகள் நுழையாது, கெட்ட கனவுகள் வராது, மரண பயம் ஏற்படாது. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், மேலும் பைரவர் சன்னதியில் கொடுக்கப்படும் விபூதியையும் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து விபூதியை பூசிக் கொண்டு பிறகு நீங்கள் வெளியில் செல்லலாம். இந்த எளிய பரிகாரத்தை செய்தால் எப்பேர்ப்பட்ட காரிய தடைகள் இருந்தாலும், அவை வெற்றியடையும் என்பது நம்பிக்கை.