ஒருவர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், குருவின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க வேண்டும். குருவினுடைய சரியான வழிநடத்தல் இருந்தால் நாம் வாழ்க்கையில் சீக்கிரம் ஜெயித்து விடலாம். எந்த மாணவன், ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை சரியாக பின்பற்றி, ஆசிரியருக்கு மரியாதை செலுத்தி படிக்கும் நாட்களில், தன்னுடைய வாழ்க்கையை வழிநடத்தி செல்கின்றானோ, அவன் தான் வாழ்க்கையில் ஜெயிக்கின்றான்.
குருவின் ஆசிர்வாதம் கிடைக்க, பிள்ளைகள் அறிவில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். இது முதல் விஷயம். மாணவர்களுக்கு, கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் தான் குரு. அடுத்தபடியாக நம்முடைய வாழ்க்கையில் நாம் யாராவது ஒரு மகானை குருவாக தேர்ந்தெடுத்து அவர் வழி நடக்க வேண்டும். யாராவது ஒரு குருவின் பாதங்களை சரணடைந்தால், இறைவனது பாதங்களை சரணடைய வாய்ப்புகள் கிடைக்கும் என்பது பெரியவர்களின் கூற்று.
உதாரணத்திற்கு, அருணகிரிநாதரையே எடுத்துக் கொள்வோமே. “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்று முருகப்பெருமானையே அவர் குருவாக தேர்ந்தெடுத்து வழிபாடு செய்துள்ளார் அது போல தான், குரு அருள் ஒரு மனிதனுக்கு நிறைவாக கிடைத்து விட்டால் அவனுடைய வாழ்க்கை சீராகும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். குரு அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், வியாழக்கிழமை குரு பகவானின் வழிபாடை செய்ய வேண்டும்.
நாளைய தினம் 10-4-2025 வியாழக்கிழமை பிரதோஷ நாளும் சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளில் சிவன் கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்திக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்தால் குரு அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் அருளை நாம் பெறும் போது நம்முடைய ஜாதக கட்டத்தில் குருவால் இருக்கக்கூடிய தோஷங்கள் விலகும். நாளைய தினம் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் பிரதோஷ நேரத்தில், குரு பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.
குரு பகவானுக்கு நாளைய தினம் 4.30 டு 6:00 மணி இந்த இடைப்பட்ட காலத்தில் கொண்டை கடலை மாலையை தக்ஷனாமூர்த்திக்கு செலுத்தி வேண்டிக்கொண்டால் நல்லதே நடக்கும். குரு திசை நடப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தைகளுக்கு எல்லாம் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம். இதோடு மட்டுமல்லாமல் பிரதோஷ நேரத்தில் நாளைய தினம் நந்தி தேவரை வணங்கினால் குரு தோஷம் விலகும்.
பக்தர்களை காக்கும் வேலையை நந்தி பகவான் செய்கின்றார். வியாழக்கிழமை வந்திருக்கும் பிரதோஷ நாளில், சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நேரத்தில், எவர் ஒருவர் நந்தி தேவரை வணங்கி வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு நன்றி தேவரே குருவாக மாறி, அவர்களுடைய வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல உதவி புரிவார் என்பது தான் இந்த வியாழக்கிழமை பிரதோஷ வழிபாட்டிற்கு பின்னால் மறைந்திருக்கும் நம்பிக்கை.
நாளைய தினம் சிவன் கோவிலில் அமர்ந்து நந்தி தேவரை வணங்கி பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். உங்கள் வாழ்வு வளம் பெறும்.
நந்தி தேவர் மந்திரம்
நந்திகேசி மஹாயாக
சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம்
அனுக்ராம் தாதுமாஹஸ
இதையும் படிக்கலாமே: கல் உப்பு வாங்கும்போது செய்ய வேண்டிய சில்லறை பரிகாரம்
நாளைய தினம் உங்களால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் சரி, வீட்டிலேயே விளக்கு ஏற்றி சிவபெருமானையும் நந்தி தேவரையும் மனமுருக பிரார்த்தனை செய்து, இந்த மந்திரத்தை சொல்லி சிவனது பஞ்சாக்ஷர மந்திரமான “ஓம் நமசிவாய” மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.