
ஒவ்வொருவர் வாழ்க்கையில் காரியத்தடை என்பது ஒவ்வொரு மாதிரி வரும். சில பேருக்கு தொழிலில் தடை இருக்கும். சில பேருக்கு நல்ல வேலை கிடைப்பதில் தடை இருக்கும். சில பேர் செய்யக்கூடிய வேலையிலேயே பிரச்சனைகளை அனுபவித்து வருவார்கள். சில பேருக்கு படிப்பதில் கூட ஆர்வம் இருக்காது. கல்வி தடை இருக்கும். சில பேருக்கு வீடு கட்டுவதில் தடை இருக்கலாம்.
சில பேருக்கு சொத்து சுகம் வாங்குவதில் தடை இருக்கலாம். சில பேர் அடமானத்தில் நகையை வைத்துவிட்டு அதை மீட்க முடியாமல் தவித்து வரலாம். இப்படி ஒருவருடைய வாழ்க்கையில் எந்த நல்ல காரியம் தடைப்பட்டு நிற்கிறதோ, அந்த காரிய தடையை உடைக்க விநாயகரை இந்த முறைப்படி இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யவும்.
தொடர்ந்து 21 நாட்கள் விநாயகரை இப்படி கும்பிட்டு இந்த மந்திரத்தை 21 முறை சொன்னால், எவ்வளவு பெரிய காரியத்தடையும் உங்களுக்கு விலகிவிடும். பிறகு நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியடையும். தினமும் காலையில் எழுந்து வீட்டிலிருந்த படியே விநாயகர் திருவுருவப்படத்திற்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, விநாயகருக்கு அருகம்புல் சாத்தி விட வேண்டும்.
விநாயகரை மனதார நினைத்து கொஞ்சம் உதிரியாக இருக்கும் அருகம்புல்லை எடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து கொண்டே இந்த மந்திரத்தை சொல்லலாம். நீங்கள் சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம் இதோ.
ஓம் சித்தி புத்தி லக்ஷ்ய லாப சஹித
ஸ்ரீ கஜானனாய நமஹ
மிக மிக எளிமையான மந்திரம் வெறும் இரண்டு வரியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டை உங்களால் வீட்டில் அமர்ந்து சரிவர சொல்ல முடியவில்லை என்றால், காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போங்க. அங்கு ஒரு மண் அகலில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பிள்ளையார் கோவில் அமர்ந்து, இந்த மந்திரத்தை உச்சரித்தாலும் மிக மிக நல்லது.
உங்களுக்கு எந்த காரியம் தடைபட்டுக் கொண்டே இருந்தாலும் சரி, அந்த காரியத்தை தடையை விலக்க இந்த மந்திரம் உதவி செய்யும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி காரியத்தடை இருக்கும். சில பேர் வீட்டில் திருமண தடை கூட இருக்கும். அந்த தடையை தகர்ப்பதற்கும் இந்த மந்திரம் கை கொடுக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: திருப்பதியில் வணங்க வேண்டிய தெய்வங்கள்
நோய் நொடி உள்ளவர்கள் கூட இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். உடம்பில் இருக்கும் நோய் நொடி தீரும். 21 நாள், 21 முறை இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு பிறகு வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மாற்றத்தை பாருங்கள். உங்களுக்கே புரியும். விநாயகர் அருளாசி அனைவருக்கும் கிடைக்க வேண்டி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.