- Advertisement -
சமையல் குறிப்புகள்

என்ன கற்பூரவள்ளி இலையை அரைத்து குழம்பா? ஆமாங்க மருந்திற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த கற்பூரவள்ளி இலையை வைத்து ஒரு அருமையான புளி குழம்பு செய்யலாம் வாங்க.

- Advertisement -

கற்பூரவள்ளி ஒரு இயற்கை தாவரம் என்றே கூறலாம். இது எந்த சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் வளரும் தன்மை உண்டு. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இந்த கற்பூரவள்ளி சாறில் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவே இருக்காது. அது மட்டும் இன்றி நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இந்த கற்பூரவள்ளி ஒரு அருமருந்து. இது மட்டும் இன்றி இது செரிமானத்திற்கும் பெருமளவில் உதவி செய்கிறது. இதில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளதால் கற்பூரவள்ளி இலையை நாம் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த தாவரமாகவே இத்தனை நாட்களும் நாம் அறிந்து வைத்திருந்தோம். ஆனால் இந்த கற்பூரவள்ளிஇலையை வைத்து ஒரு அருமையான புளி குழம்பு வைக்கலாம் அது உங்களுக்கு தெரியுமா? இதோ அதை எப்படி செய்வது என்பதற்கான ஒரு பயனுள்ள பதிவு தான் இது.

தேவையான பொருட்கள்: கற்பூரவள்ளி இலை -15, காய்ந்த மிளகாய் -15, புளி -ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு, கடுகு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வடகம் – 1 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, பூண்டு பல் – ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், நல்லெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன், வெல்லம் – ஒரு சின்ன கட்டி, கருவேப்பிலை – ஒரு கொத்து

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாயை சேர்த்து லேசாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதே பேனில் மிளகு போட்டு பொரிந்ததும் சீரகம், வடகம், பூண்டு, ( உரித்து வைத்த பூண்டில் பாதி அளவு) தேங்காய் சேர்த்து இதையெல்லாம் லேசாக வறுபட்ட பிறகு எடுத்து வைத்துள்ள கற்பூரவள்ளி இலையும் இதில் சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்றாக வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இது அப்படியே ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஏற்கனவே வறுத்து வைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து இந்த வறுத்த பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது புளியை நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். அந்த புளி கரைச்சலுடன் அரைத்து வைத்துள்ள அந்த கலவையை சேர்த்து நன்றாக கலந்து வைத்து விடுங்கள். (இந்த குழம்பில் காரத்திற்கு காய்ந்த மிளகாயும், புளிப்புக்கு தக்காளிக்கு பதிலாக புளியை சற்று கூடுதலாக சேர்த்து கொள்ள வேண்டும்).

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து அதில் ஆறு ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி, கடுகு வெந்தயம் சேர்த்து தாளித்தவுடன், சின்ன வெங்காயம், கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதங்கிய பிறகு கரைத்து வைத்த அந்த புளி மசாலா கலவையை இதில் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக குழம்பு வற்றும் வரை கொதிக்க விடுங்கள். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும் சமயத்தில் எடுத்து வைத்துள்ள வெல்லத்தை இதில் சேர்த்து பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: உடம்பு வலி சரியாக, குறிப்பாக பெண்களுக்கு கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராமல் இருக்க, எலும்புகள் வலிமை பெற வாரத்தில் ஒரு நாள் இந்த சாதம் செஞ்சு சாப்பிடுங்க.

இதோ கற்பூரவள்ளி அரைத்து விட்ட குழம்பு தயாராகி விட்டது. இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே சாப்பிடலாம். கற்பூரவள்ளி உடம்புக்கு மிகவும் நல்லது. இது போன்ற மருத்துவ குணம் உள்ள பொருட்களை வைத்து வாரத்தில் ஒரு முறையாவது உணவாக செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

- Advertisement -