- Advertisement -
- Advertisement -

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திர நாள் அன்று திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய அருணாச்சலேஸ்வரர் மலையின் மீது தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் ஏற்றுவதை பார்த்த பிறகு அனைவரும் அவர்களுடைய வீட்டிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகவும் அதேசமயம் சிவபெருமானுக்கு உகந்த நாளாகவுமே கருதப்படுகிறது. இதிலும் குறிப்பாக அன்றைய தினத்தில் பிரதோஷம் வருகிறது என்பது கூடுதல் விசேஷமான ஒன்று. பிரதோஷ நேரம் முடிவடைந்த பிறகு வீடு முழுவதும் தீபமேற்றி நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பிரகாசமான ஒரு வெளிச்சம் என்பது ஏற்படும் என்று கூறலாம். அப்படிப்பட்ட திரு கார்த்திகை நாளன்று நாம் செய்யக்கூடிய சிறப்பு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு

பொதுவாகவே திரு கார்த்திகை என்றதும் பலரும் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய விளக்குகளை சுத்தம் செய்து அதற்கு எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுவார்கள். அப்படி ஏற்றும் பொழுது நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளால் நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக மாறும் என்று கூறப்படுகிறது. அந்த வழிமுறைகளை பற்றியும் அதேசமயம் தீபம் ஏற்றும் பொழுது எந்த மந்திரத்தை கூறி ஏற்றினால் நம்முடைய வாழ்க்கையில் இன்னும் அதிக அளவில் நன்மைகள் உண்டாகும் என்றும் தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக திருக்கார்த்திகை நாளன்று 27 நட்சத்திரங்களுக்கு இணையாக குறைந்தபட்சம் 27 அகல் விளக்குகளையாவது ஏற்ற வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். நம்முடைய வீடு முழுவதுமே நாம் அன்றைய தினத்தில் தான் தீபம் ஏற்றுவோம். ஒவ்வொரு அறையிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீபம் ஏற்ற வேண்டும் என்றெல்லாம் பலவிதங்களில் பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த ஒரு வழிமுறையை பின்பற்றி தீபம் ஏற்றுவதால் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைப்பதோடு நம்முடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது உண்டாகும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்குகளிலும் குத்துவிளக்கிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி நாம் குத்துவிளக்கில் தீபம் ஏற்றும் பொழுது அந்த குத்து விளக்கு நம் வீட்டின் மையப் பகுதியிலோ அல்லது பூஜை அறையிலோ வைத்து ஏற்றுவோம். அவ்வாறு ஏற்றுவதற்கு முன்பாக அந்த குத்துவிளக்கு வைக்கக்கூடிய இடத்தில் பன்னீரை தெளித்து சுத்தம் செய்து பச்சரிசி மாவினால் ஐஸ்வர்ய கோலம் போட வேண்டும். அதற்கு மேல் இந்த குத்து விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த ஐஸ்வர்ய கோலத்திற்கு முன்பாக பஞ்சாமிர்தம், அப்பம் இவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இந்த பஞ்சாமிர்தத்தில் அதிக அளவில் அத்திப்பழமும் பேரிச்சம்பழமும் இருக்க வேண்டும். ஒருவேளை உங்களால் பஞ்சாமிர்தத்தை தயார் செய்ய முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை. அத்திப்பழத்தையும், பேரிச்சம்பழத்தையும் வைத்துக் கூட நெய்வேத்தியமாக படைக்கலாம். வீடு முழுவதும் தீபம் ஏற்றி முடித்த பிறகு வீட்டில் இருக்கக் கூடிய விளக்குகளை ஆப் செய்து ஒரு அரை மணி நேரமாவது தீபச்சுடர்ளியில் வீடு இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அகல் விளக்கையும் நாம் ஏற்றும்பொழுது ஓம் அக்னி தேவனே எழுந்தருளக என்னும் மந்திரத்தை கூறிக்கொண்டு ஏற்ற வேண்டும். தீபங்கள் அனைத்தையும் ஏற்றி முடித்த பிறகு சாம்பிராணி தூபத்தை வீடு முழுவதும் மயிலிறகால் பரப்பி விட வேண்டும். குடும்பம் சகிதமாக குத்து விளக்குக்கு முன்பாக அமர்ந்து நெய்வேத்தியமாக வைத்த பொருட்களை எடுத்து உண்ண வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் இருக்கக்கூடிய மனகசப்புகள் முற்றிலும் நீங்கும். செல்வ வளம் அதிகரிக்கும். நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:யாரிடமும் சொல்லக்கூடாத 6 விஷயங்கள்

திருக்கார்த்திகைக்கு தீபம் ஏற்றுவது என்பது நம்முடைய வழக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு முறை தான். அதை நாம் பண்டிகையாகவே கொண்டாடுகிறோம். அப்படி நாம் செய்யக்கூடிய இந்த வழிபாட்டை சற்று கூடுதல் கவனத்துடன் இந்த பதிவில் கூறியது போல் செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் அவர்கள் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை உணர முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -