
கார்த்திகை மாதம் வரும் 30 நாட்களுமே தெய்வ வழிபாட்டிற்கு சிறந்த நாட்கள் தான். ஒவ்வொரு நாளும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபாடு செய்தால் இருள் இருக்கும். நம் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வரும். அந்த வகையில் நாளைய தினம் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கிறது. நம்முடைய வாழ்வில் எதிர்கொள்ளும் தடைகளை தகர்ப்பதற்கு நாளைய தினம் விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு.
நாளை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சுத்தபட்டமாக குளித்து விடுங்கள். சூரியன் உதிக்கும் சமயத்தில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். இந்த மாதத்தில் சூரிய உதயத்தை காண்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் தான். காலையில் அதிக மேகமூட்டம் இருக்கிறது. ஆனாலும் கிழக்கு பக்கமாக நின்று வெளிச்சத்தை கொடுக்கும் சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள்.
பூஜை அறையில் வந்து இரண்டு மண் அகல்விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி, விநாயகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எந்த விஷயம் தடையாக இருக்கிறது. அந்த தடை விலக வேண்டும் என்று பிராத்தனை வைக்க வேண்டும்.
நல்ல வேலை கிடைப்பதில் தடை, ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கிறது, அல்லது புது வீடு கட்டுவதில் தடை, புது நிலம் வாங்குவதில் தடை, சேமிப்பதில் தடை, இப்படி எது உங்கள் வாழ்க்கையில் ரொம்பவும் தடையாக இருக்கிறது. அந்த தடையை தகர்த்துவிடு விநாயகா என்று வேண்டிக்கொண்டு ‘ஓம் கணேசாய நமஹ !’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு, பிறகு உங்களுடைய வேலைகளை துவங்கலாம்.
நாளை மாலை வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி திரி போட்டு, தீபம் ஏற்றி வைப்பது சிறப்பான பலனை கொடுக்கும். நாளை விநாயகருக்கு தேங்காய் எண்ணெயால் தீபம் போடுவது அத்தனை நல்லது. விநாயகர் கோவிலை 3 முறை வலம் வர வேண்டும். மூன்று முறை வலம் வரும்போது, ‘ஓம் கணேசாய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே வளம் வாங்க.
பிறகு பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டு பிள்ளையார் கொட்டு வைத்து நமஸ்காரம் செய்து கொண்டு வீடு திரும்பவும். விநாயகருக்கு உங்களால் முடிந்த அருகம்புல், வாசம் நிறைந்த பூக்கள் பழம் வெற்றிலை பாக்கு என்ன வாங்கிச் செல்ல முடியுமோ, அதை உங்கள் சௌகரியம் போல வாங்கி எடுத்துச் செல்லுங்கள். நாளைய தினம் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் விளக்கு போட்டு மேல் சொன்ன வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் விநாயகரின் பரிபூரண அருள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: சொந்தமாக வீடு கட்ட ஏற்ற வேண்டிய வாஸ்து தீபம்
இந்த வழிபாட்டை, இந்த ஞாயிற்றுக்கிழமை தவறவிட்டவர்கள் அடுத்து வரக்கூடிய கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமையிலும் செய்யலாம். வாழ்வில் இருக்கும் தடை கற்கள் படிக்கற்கள் ஆக மாறும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.