ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இருக்க இருப்பிடம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட இருப்பிடம் என்பது சொந்தமாக அமைந்துவிட்டால் அவர்களைப் போல ஒரு அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை. அதிலும் குறிப்பாக அந்த வீட்டில் எந்த வித குறைகளும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதற்கு இன்னும் அதிக அளவில் பலன்கள் இருக்கும். பலரும் தான் ஆசைப்பட்டு வீடு கட்டி இருப்பார்கள். ஆனால் அந்த வீட்டில் இருக்கக் கூடிய ஏதாவது ஒரு வாஸ்து தோஷத்தால் அந்த வீட்டில் குடியிருக்க கூடிய நிலைமையே இல்லாமல் போயிருக்கும்.
இன்னும் சிலரோ எவ்வளவு முயற்சி செய்தும் வீடு கட்டும் யோகமே இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலரோ வாடகை வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று வருத்தப்படுவார்கள். எதுவாக இருந்தாலும் நாம் இருக்கக்கூடிய இடத்திற்கு வாஸ்து என்பது கண்டிப்பான முறையில் இருக்கிறது. அந்த வாஸ்துவில் எந்த வித தோஷமும் இல்லை என்றால் தான் நாம் எடுக்கக்கூடிய எந்த முயற்சியாக இருந்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி பெறும். அந்த வகையில் வாஸ்து நாள் அன்று வாஸ்து தோஷம் நீங்கவும் சொந்த வீடு கட்டவும் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக ஒவ்வொரு மாதமும் வாஸ்து நாள் என்பது வரும். இந்த வாஸ்து நாள் வரும் நாளில் பலரும் சொந்தமாக வீடு கட்டுவதற்கோ அல்லது கிணறு தோன்றுவதற்கு அடித்தளம் என்பதை அமைப்பார்கள். அப்படிப்பட்ட நாளில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும், அதற்குரிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறாமல் இருப்பவர்களும், அதே சமயம் தாங்கள் குடியிருக்கும் வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷம் முற்றிலும் நீங்கவும் இந்த ஒரே ஒரு தீபத்தை இந்த குறிப்பிட்ட நேரத்தில் ஏற்றினால் போதும்.
சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி அந்த வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷம் நீங்க வேண்டும் என்பவர்கள் நவம்பர் மாதம் 23ஆம் தேதி காலை 11:25 இலிருந்து 12:05க்குள் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். வீட்டு பூஜை அறையில் சிவலிங்கத்திற்கு முன்பாகவோ அல்லது சிவன் படத்திற்கு முன்பாகவோ சுத்தம் செய்து, பச்சரிசி மாவினால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அந்தக் கோலத்தின் நான்கு திசைகளை பார்த்தவாறு நான்கு விளக்குகளை வைக்க வேண்டும். இந்த ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். உள்பக்கம் இருக்கக் கூடாது. வெளிப்பக்கத்தில் தான் தீபம் எரிய வேண்டும்.
இதில் சுத்தமான நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு “ஓம் சிவ சிவ சிவாய நம” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை சிவபெருமானிடம் கூற வேண்டும்.
இதையும் படிக்கலாமே:கவலையை போக்கும் கால பைரவர் வழிபாடு
இப்படி வாஸ்து நாள் அன்று தீபமேற்றி சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு வாஸ்து தோஷம் நீங்குவதோடு சொந்த வீடு கட்டுவதற்குரிய யோகமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.