
கணவன் மனைவிக்குள் சண்டை. குடும்பத்தில் நிம்மதி இல்லை. கணவன் பேசினாலும் பிரச்சனை, மனைவி பேசினாலும் பிரச்சனை, இருவரும் பேசாமல் இருந்தாலும் பிரச்சனை, குடும்பத்தில் கைகலப்பு தகராறு. பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றிய கவலை என்று உங்களுடைய வீட்டிலும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே வருகிறதா. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆன்மீக ரீதியாக ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதுதான் கருப்பட்டி தீப பரிகாரம்.
இது மிகப் பழமையான பரிகாரம். எளிமையான பரிகாரம் சக்தி வாய்ந்த பரிகாரம். இந்த பரிகாரத்திற்காக நீங்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் கூட கிடையாது. ஒரு வெள்ளிக்கிழமை இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாம்.
3 வெள்ளிக்கிழமைகள், 5 வெள்ளிக்கிழமைகள், கணக்கு வைத்து இந்த தீபத்தை வீட்டில் ஏற்றிப் பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். சரி, அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று இப்போது பார்த்துவிடலாம்.
கடைகளில் கருப்பட்டி விற்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள். கொட்டாங்குச்சியை கவிழ்த்து வைத்தது போல இருக்கும் அல்லவா. அந்த கருப்பட்டிக்கு மேல் பகுதியில் கொஞ்சம் ஆழமாக துளை போட்டுக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி பூஜை அறையில் வைக்க வேண்டும். கருப்பட்டியை அப்படியே நிற்க வைத்தால் அடியில் சப்போர்ட் இல்லாமல் கீழே சாய்ந்து விடும்.
ஆகவே ஒரு வாழை இலை அல்லது பாக்குமட்டை தட்டுக்கு மேல் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் இந்த இரண்டு கருப்பட்டிகளையும் நிற்க வைத்து, தீபம் ஏற்றி இறைவனுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து வேண்டுதலை செய்து கொள்ள வேண்டும். குலதெய்வத்தை மனதார நினைத்து பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபம் ஒரு மணி நேரம் உங்கள் வீட்டில் எரிந்தாலும் போதும். வெள்ளிக்கிழமை மாலை இந்த பரிகாரத்தை வீட்டில் செய்யலாம்.
வெள்ளிக்கிழமை காலை நேரத்திலும் இந்த பரிகாரத்தை வீட்டில் செய்யலாம். மறுநாள் இந்த கருப்பட்டியை கொண்டு போய் பசு மாட்டிற்கு சாப்பிடுவதற்காக கொடுத்து விட வேண்டும். அதன் கீழே இருக்கும் பச்சரிசியை எடுத்து நீங்கள் வீட்டில் சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். தவறு ஒன்றும் கிடையாது. பச்சரிசியை வீணாக்க வேண்டாம். உங்களால் முடியும் என்ற பட்சத்தில் அந்த பச்சரிசியை ஏதாவது ஒரு ஏழைக்கு தானம் கொடுத்தாலும் தவறு கிடையாது.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் விலக கால பைரவர் வழிபாடு
கணவன் மனைவிக்குள் அதீத சண்டை, ஒருவருக்கொருவர் போராடி தான் உங்கள் குடும்பத்தையே நடத்துகிறீர்கள் என்றால், இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் சண்டை சச்சரவு தீரும். பிடிக்காத திருமணம் செய்தவர்கள் அல்லது பிடித்து திருமணம் செய்து மனஸ்தாபம் வந்து பிரிந்தவர்கள், எல்லாம் இந்த கருப்பட்டி தீபத்தை ஏற்றினால், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் என்பது நம்பிக்கை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த ஆன்மீகம் வழிபாட்டை மேற்கொண்டு பலனடையலாம்.