- Advertisement -
சமையல் குறிப்புகள்

இந்த ஒரு ஊறுகாய் சாப்பிட்டால் கருகருவென முடி வளரவும், மூட்டு வலி, முழங்கால் வலி, கண் பார்வை கோளாறு ஏற்படாமல் இருக்கவும் செய்யுமாம் தெரியுமா? 1 ஸ்பூன் ஊறுகாயில் இவ்வளவு பலன்களா?

- Advertisement -

நம் பாரம்பரிய சமையலில் ஊறுகாய் இல்லாமல் அறுசுவை உணவு கிடையாது. ஊறுகாய் விரும்பிகள் விதவிதமான வகையில் ஊறுகாய்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உண்டு. குறிப்பாக பூண்டு ஊறுகாய், எலுமிச்சங்காய் ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய் போன்றவை அதிக அளவில் சுவைக்கப்படுகிறது. அந்த வகையில் கறிவேப்பிலையை கொண்டு செய்யப்படும் இந்த கருவேப்பிலை ஊறுகாய் உடல் நல ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான முறையில் நமக்கு கொடையாக இருக்கிறது. இந்த கருவேப்பிலை ஊறுகாய் ரெசிபியை வீட்டிலேயே எளிதாக எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கருவேப்பிலை ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை இலைகள் – 5 கப், புளி – கால் கப், கடுகு – இரண்டு டீஸ்பூன், தனியா விதைகள் – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, வெறும் மிளகாய் தூள் – அரை கப், உப்பு – கால் கப், பூண்டு பல் – 7, கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், வெல்லம் – ஒரு சிறு துண்டு.

- Advertisement -

கருவேப்பிலை ஊறுகாய் செய்முறை விளக்கம்:
கருவேப்பிலை ஊறுகாய் செய்வதற்கு முதலில் ஐந்து கப் அளவிற்கு கருவேப்பிலை இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிய கப் ஒன்றை இதற்கென தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதே கப்பில் மற்ற பொருட்களையும் அளக்க வேண்டும். 100 கிராமுக்கு மேலாக இருக்கும் இந்த கருவேப்பிலை இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு மெல்லிய துணியில் இட்டு ஃபேன் காற்றில் ஆற விட்டு விடுங்கள். ஈரப்பதம் எல்லாம் ஓரளவுக்கு ஈரம் நீங்கியதும் இதை பயன்படுத்தலாம். கால் கப் அளவிற்கு புளியை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு வடசட்டியை வைத்து அதில் எண்ணெய் எதுவும் ஊற்றாமல் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் தனியா விதைகள் மற்றும் வெந்தயத்தை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த பொருட்கள் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நீங்கள் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள கருவேப்பிலை இலைகளை போட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ரெண்டு நிமிடம் நன்கு வதக்கிய பின்பு அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதே வாணலியில் நீங்கள் ஊற வைத்துள்ள புளியை தண்ணீருடன் அப்படியே சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல வதக்கி விட வேண்டும். இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்து எடுத்த பொருட்கள், இந்த புளி பேஸ்ட் மற்றும் வதக்கிய கருவேப்பிலை இலைகள் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து பின்பு அரை கப் அளவிற்கு வெறும் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை தாளிக்க வேண்டும். தாளிக்க அதே வாணலியில் நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய் ஒன்னே கால் கப் அளவிற்கு ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் தோலுடன் நசுக்கி எடுத்த பூண்டு துண்டுகளை சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பின்பு ஒரு ஸ்பூன் கடலை பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இப்படி செஞ்சி குடுங்க கொண்டைக்கடலையை சாப்பிடாத குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள். ட்ரை பண்ணி பாருங்க. அசத்தலான சுவையில் ஆரோக்கியமான கொண்டைக்கடலை தோசை.

இப்போது கடுகு போட்டு பொரிய விட்டு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை வதக்கி விடுங்கள். பின்பு நீங்கள் அரைத்து வைத்துள்ள ஊறுகாயை சேர்த்து, ஒரு துண்டு வெல்லம் போட்டு நன்கு எண்ணெய் கலந்து திரண்டு வர வதக்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் ஊறுகாய் பாதத்திற்கு வந்ததும், இதை நன்கு ஆறவிட்டு விடுங்கள். பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் மூன்று மாதம் வரை இது கெட்டுப் போகவே செய்யாது, ரொம்பவே அருமையாக இருக்கும். தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள், முடி கொட்டாது, முழங்கால், மூட்டு வலி வராது, கண் பார்வை தெளிவடையும்.

- Advertisement -