இப்படி செஞ்சி குடுங்க கொண்டைக்கடலையை சாப்பிடாத குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள். ட்ரை பண்ணி பாருங்க. அசத்தலான சுவையில் ஆரோக்கியமான கொண்டைக்கடலை தோசை.

- Advertisement -

தானிய வகைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் நம் உடலுக்கு அத்தனை ஆரோக்கியமும் சத்துக்களும் கிடைக்கக்கூடிய ஒன்று தான். நாம் தான் நேரமின்மை காரணத்தாலும் ருசிக்கு அடிமைப்பட்டு கிடந்ததாலும் இது போல் தானிய வகைகளை பெரும்பாலும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. அதிலும் இந்த கொண்டைக்கடலை இவையெல்லாம் வீட்டில் விசேஷ நாட்களில் சுவாமிக்கு செய்ய மட்டும் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். இதை எல்லாம் சாதாரணமாகவே அவித்து நம் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போல கொடுத்தால் உடலுக்கு அத்தனை சத்துக்கள் கிடைக்கும். இதில் புரோட்டீன் மற்றும் இரும்பு சத்து உள்ளது , இரத்த சோகை தடுக்கும், எப்படி இதில் எண்ணற்ற சத்துகள் உள்ளது. இதை அப்படியே வேக வைத்து தந்தால் குழந்தைகளுக்குக் பிடிக்காது. இந்த கொண்டைக்கடலை குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களும் எடுத்து கொள்ள வேண்டிய உணவு தான். இதையே கொஞ்சம் வேற மாதிரி செய்து தாருங்கள் உங்கள்குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதோ கொண்டை கடலை தோசை செய்முறை பதிவு.

தேவையான பொருட்கள்: கொண்டைக்கடலை – 1 கப் (ஊற வைத்தது) இஞ்சி – 1 சிறிய துண்டு, மிளகு – 1/2 ஸ்பூன், பச்சரிசி மாவு – 1/4 கப், உப்பு – 1/4 ஸ்பூன்.

- Advertisement -

இந்த கொண்டைக்கடலை தோசை செய்ய முதல் நாள் இரவே ஒரு கப் அளவு கொண்டக்கடலை எடுத்து நன்றாக அலசி ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேலை நீங்கள் ஊற வைக்க மறந்து விட்டால், அடுத்த நாள் கொண்டைக்கடலையும் நன்றாக கொதிக்கும் நீரை ஊற்றி ஒரு தட்டு போட்டு இறுக்கமாக மூடி இரண்டு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள் கொண்டக்கடலை ஊறிய பதத்திற்கு வந்து விடும்.

அதன் பிறகு இந்த கொண்டைக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பூண்டு, இஞ்சி, மிளகு, உப்பு அனைத்தையும் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்து தனி ஒரு பௌலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த கரைத்து வைத்த மாவில் கால் கப் அளவு பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக கலந்து ஒரு பத்து நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை வைத்து சூடானதும் நீங்கள் இதை மெலிசான தோசையாக வார்த்தாலும் வரும் அல்லது தடிமனாக ஊற்றினாலும் தோசை நன்றாகவே வரும்.

இதில் கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, போன்றவற்றை பொடியாக நறுக்கி போட்டு கரைத்து பணியாரம் போலவும் ஊற்றி சாப்பிடலாம். இதன் சுவையும் மிகவும் அருமை ஆக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சுறா புட்டு தெரியும். அது என்ன புடலங்காய் புட்டு? இந்த புடலங்காய் புட்டும் சுறா புட்டு போலவே சூப்பரா இருக்கும். இதோ ரெசிபி.

இந்த தோசை பணியாரம் இரண்டிற்குமே அனைத்து வகை சட்டினியும் நன்றாக இருக்கும். நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து பாருங்கள்.

- Advertisement -