- Advertisement -

செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும் முறை

துர்க்கை அம்மனின் அருளை பெற வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமையில் அன்னையை வணங்க வேண்டும் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். செவ்வாய்க்கிழமையில் நாம் துர்க்கை அம்மனை வணங்கும் பொழுது அதற்கான பலன் பல மடங்கு அதிகரிக்கும். இதற்குக் காரணம் செவ்வாய்க்கிழமைக்கான கிரக நாயகனான அங்கார காரகன் அன்னையின் அருளைப் தவமிருந்து பெற்றதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி அன்னைக்கு ராகு கால பூஜை மிகவும் உகந்தது. ஏனெனில் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதி தேவதை உண்டு. அந்த வகையில் ராகு காண அதிதேவதை துர்க்கை அம்மன். ஆகையால் தான் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வணங்கும் போது ராகு தோஷம் நீங்கி குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் விலகும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

அப்படி வணங்கக் கூடிய துர்க்கை அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்யும் போது அம்மனை நேரில் வந்து அருள் பாலிப்பார் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனின் வணங்கும் முறை

செவ்வாய்க்கிழமையில் அன்னையை ராகு கால நேரத்தில் வணங்குவது தான் சிறந்தது. அப்படி வணங்கும் பொழுது மஞ்சள் நிற பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை போன்ற பூக்களை அன்னைக்கு சாற்றி வழிபடலாம். அதே போல பழ வகைகளில் மஞ்சள் நிற பழங்களான வாழைப்பழம் பலாச்சுளை மாம்பழம் போன்றவற்றை வைத்து வணங்குவது சிறப்பு.

- Advertisement -

இவற்றுடன் நீங்கள் வீட்டில் செய்த ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். அதற்கு மஞ்சள் நிறத்திலான வெண் பொங்கல் எலுமிச்சை சாதம் போன்றவற்றை வைக்கும் பொழுது அன்னை மகிழ்ந்து ஏற்றுக் கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி எலுமிச்சை தீபம் ஏற்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

அன்னைக்கு 9 எலுமிச்சை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றுவது நல்லது. இதன் மூலம் சுமங்கலி பெண்கள் மாங்கல்ய பாக்கியத்தை பெறுவார்கள். குடும்பத்தில் மங்களகரமான விஷயங்கள் நடக்கும். திருமண தடை குழந்தை பேரு இல்லாமை நீங்கும். அதுமட்டுமின்றி போன்ற குடும்பத்தில் உள்ள சகலவித பிரச்சனைகளும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அப்படி ஏற்றும் தீபத்தில் நல்லெண்ணெய்க்கு பதிலாக இலுப்பை எண்ணெய் ஏற்றும் போது நோய் தீர்ந்து ஆயுள் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இவற்றுடன் அன்னைக்கு ராகு கால பூஜையில் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு பூ ரவிக்கை அல்லது புடவை மற்றும் காணிக்கை வைத்து வணங்கிய பிறகு அதை ஆலயத்திற்கு வரும் யாரேனும் ஒரு சுமங்கலி பெண்களுக்கு கொடுத்தால் இந்த காணிக்கையை அன்னையே நேரில் வந்து ஆனந்தமாய் பெற்றுக் கொள்வார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தங்க நகை சேர அஷ்டமி வழிபாடு

செவ்வாய்க்கிழமையில் அன்னையின் அருளை பெற வழிபாடு செய்பவர்கள் இந்த காணிக்கையை ஒரு முறையேனும் கொடுத்து அன்னையின் அருளை முழுவதுமாக பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -