- Advertisement -

கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போக செவ்வாய்க்கிழமை பரிகாரம்.

- Advertisement -

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் என்பது இருக்கும். அந்த கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வார்கள். அப்படி முயற்சிகளை மேற்கொண்டும் அதில் தடைகள் ஏற்பட்டு அந்த கஷ்டங்கள் விலகாமல் இருக்கிறது, என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமானை வழிபாடு செய்து விட்டு உப்பையும் மிளகையும் இந்த இடத்தில் வைத்தால் போதும் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போகும். இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செவ்வாய்க்கிழமை பரிகாரம்

நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் வேலை. வேலையை தரக்கூடிய அற்புதமான ஒரு கிரகமாக திகழ்பவர் தான் செவ்வாய் பகவான். அதோடு மட்டுமல்லாமல் நம் வாழ்க்கையை சீர்குழைக்க கூடிய கடனை தருபவரும் அவர்தான். அதனால்தான் கடன் தொடர்பான பிரச்சனை தீர வேண்டும், வேலை தொடர்பான பிரச்சனை தீர வேண்டும் என்று நினைக்கக்கூடிய பலரும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். இதோடு சேர்த்து நமக்கு எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டம் தீர வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை உப்பையும் மிளகையும் வைத்து ஒரு பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்திலோ அல்லது காலை நேரத்திலோ நிலை வாசலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நிலை வாசலில் இரண்டு புறங்களிலும் ஒரு சிறிய தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ உப்பையும் மிளகையும் போட்டு வைத்து விடுங்கள். இப்படி வைத்து விட்டு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து தீபமேற்றி கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

அன்று மாலை வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது நிலை வாசலிலும் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த உப்பும் மிளகும் அப்படியே இருக்கட்டும். அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று காலையில் உப்பையும் மிளகையும் எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும். மாலை நேரத்தில் மறுபடியும் புதிதாக உப்பையும் மிளகையும் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த உப்பும் மிளகும் நிலை வாசலில் இருக்கும் பொழுது மாலை நேரத்தில் அனைத்து நாட்களிலும் நாம் தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..

- Advertisement -

இந்த முறையில் நிலை வாசலில் உப்பையும் மிளகையும் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் முருகப்பெருமான் மற்றும் துர்கா தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று எந்த கஷ்டம் நம்மை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த கஷ்டம் விலகிச் செல்லும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகன் ஆலயத்திற்கு சென்று தங்களின் பெயரில் அர்ச்சனை செய்வது மற்றும் தீபம் ஏற்றுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: நீண்ட நாள் கடன் தீர

எளிமையான பரிகாரமாக தெரிந்தாலும் இந்த பரிகாரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டம் கரைந்து ஓடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -