- Advertisement -
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று தனித்தனியாக குலதெய்வம் என்ற ஒன்று இருக்கும். பொதுவாக குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தை எந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் நம்முடைய கஷ்டங்கள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவர் வாழும் இடத்தில் இருக்கக்கூடிய எல்லை தெய்வத்தையும் தன்னுடைய குலத்தை காக்கக்கூடிய குலதெய்வத்தையும் முறையாக வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். ஒவ்வொரு நட்சத்திரத்தில் ஒவ்வொரு தெய்வத்தை வணங்குவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். அதே போல் தான் குலதெய்வத்தை வழிபடக்கூடிய நட்சத்திர நாள் என்று ஒரு நாள் இருக்கிறது.

- Advertisement -

அந்த நாள் தான் உத்திர நட்சத்திரம். மாத மாதம் வரக்கூடிய உத்திர நட்சத்திர நாளன்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். எவர் ஒருவர் உத்திர நட்சத்திரத்தில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. இப்படி அந்த உத்திர நட்சத்திர நாள் அன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று 16 வகையான அபிஷேக பொருட்களை வாங்கித் தர வேண்டும். அந்த அளவிற்கு வசதியில்லை என்பவர்கள் தங்களால் இயன்ற அபிஷேகப் பொருளை வாங்கி தரலாம்.

பிறகு முடிந்த அளவிற்கு மண்பானையில் சர்க்கரை பொங்கல் செய்து குலதெய்வத்துக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அப்படி சக்கரை பொங்கல் செய்யும் பொழுது அதில் போடக்கூடிய முந்திரியானது முழு முந்திரியாக அதிக அளவில் இருக்க வேண்டும். அப்படி இருப்பதால் அந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் பக்தர்களால் நமக்கு பல புண்ணியங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

உத்திர நட்சத்திர நாள் அன்று வழிப்பட முடியாதவர்கள் வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய பங்குனி உத்திர நாள் அன்று கண்டிப்பான முறையில் குலதெய்வத்தை வழிபட வேண்டும். முடிந்த அளவிற்கு குலதெய்வத்திற்கு புதிய வஸ்திரம் வாங்கி சாற்ற வேண்டும். வஸ்திரம் வாங்கி கொடுத்து அபிஷேக பொருட்களைத் தந்து அபிஷேகத்தில் கலந்து கொண்டு சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதன் மூலம் குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.

பொதுவாக அன்னதானம் செய்தாலே நம் கர்ம வினைகள் நீங்கும் என்று நமக்குத் தெரியும். அதுவும் குலதெய்வ கோவிலில் பங்குனி உத்திர நாளன்று காய்கறிகள் சாதத்தை நாம் அன்னதானமாக செய்து தர வேண்டும். இதில் மற்றும் ஒரு முக்கிய குறிப்பு என்னவென்றால் குலதெய்வ சிலையின் உயரம் எத்தனை அடி இருக்கிறதோ, அத்தனை கிலோ அரிசி போட்டு அன்னதானம் செய்து வழங்குவது மேலும் விஷேசத்தை தரும். அந்த அளவிற்கு அன்னதானம் செய்ய இயலாதவர்கள் அரிசியை வாங்கி கோவிலில் அன்னதானத்திற்காக தந்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: கடுமையான தோஷங்களை போக்கும் பரிகாரம்

வாழ்க்கையில் சிறப்பாக விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்றாலும் குலதெய்வத்தை வழிபடும் பொழுது இந்த எளிய வழிமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு வழிபட்டால் கண்டிப்பான முறையில் அவர்களின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும்.

- Advertisement -