கடுமையான தோஷங்களை போக்கும் பரிகாரம்

komugam
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் நன்மையும் தீமையும் ஏற்படுவதற்கு அவர்களுடைய கர்ம வினைகளை காரணம் என்று கூறப்படுகிறது. அந்த கர்ம வினைகளின் அடிப்படையில் தான் ஜாதகம் இருக்கிறது. ஜாதகத்தை பார்க்கும் பொழுது அதில் இருக்கக்கூடிய தோஷங்களை பொருத்து அவர்களின் கர்ம வினைகளை முடிவு செய்து அதற்கேற்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் அந்த தோஷங்கள் நிவர்த்தி ஆவதோடு அவர்களின் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கோவிலில் எந்த இடத்தை சுத்தம் செய்தால் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பல தோஷங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தோஷத்திற்கும் ஒவ்வொரு வகையான பரிகாரங்களும் இருக்கின்றன. திருமண தோஷம், மாங்கல்ய தோஷம், குழந்தையின்மை, செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.ஒருவரின் ஜாதகத்தில் பல தோஷங்கள் இருந்தாலும் மிகவும் மோசமான தோஷமாக இருந்தாலும் அந்த தோஷத்தை எளிமையான முறையில் சரி செய்ய முடியும் அது எப்படி என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக ஆலய வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. மனதில் நிம்மதி இன்றி இருப்பவர்கள் ஆலயத்திற்கு சென்று அமர்ந்திருந்தால் போது நிம்மதி ஏற்படும். மனபாரம் குறையும் என்று கூறப்படுகிறது. கோவிலில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் இருக்கிறது என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த பலன்கள் அனைத்தையும் முழுமையாக பெற வேண்டும் என்றால் ஒரு கோவிலுக்குள் நாம் செல்லும் பொழுது அந்த கோவிலில் இருக்கும் அனைத்து இடங்களையும் பொறுமையாகவும் நிதானமாகவும் கடந்து சென்று வணங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

கோவிலுக்கு சாமி கும்பிட செல்கிறோம் என்பதற்காக நேராக கடவுளை வணங்கி விட்டு திரும்ப வருவதால் எந்த பலனும் கிடைக்காது. கடவுள் இருக்கும் கர்ப்ப கிரகத்திற்கு ஈடாக கருதக்கூடிய மற்றொரு இடமாக திகழ்வதுதான் கோமுகம். எப்படி கர்ப்ப கிரகத்தில் இருக்கக்கூடிய கடவுளுக்கு நாம் அபிஷேகங்களை செய்யும் பொழுது பயபக்தியுடன் வணங்குகிறோமோ அதே போல் தான் அந்த அபிஷேகம் செய்த தீர்த்தம் வரும் இடமான கோமுகமும் மிகவும் பயபக்தியுடன் வணங்க வேண்டிய ஒரு இடமாக திகழ்கிறது.

- Advertisement -

பல கோவில்களில் இந்த இடத்தை முறையாக பராமரிக்காமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட இடங்களில் இயற்கையான பொருட்களை வைத்து கோமுகத்தை சுத்தம் செய்யும்பொழுது நம்முடைய ஜாதகத்திலும், வாழ்க்கையிலும் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷம் நிவர்த்தி அடையும் என்று கூறப்படுகிறது. தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக பரிகாரங்களை செய்கிறோம் என்று செலவுகள் செய்வதற்கு பதிலாக கோவிலை சுத்தமாக பராமரிப்பது பல தோஷங்களை நீக்கும் அற்புதமான பரிகாரமாக திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: திருமணம் நடக்க துர்க்கை அம்மன் வழிபாடு

தோஷங்களால் கஷ்டப்படுபவர்கள் எங்கும் செல்லாமல் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அந்த ஆலயத்தின் கோமுகத்தை சுத்தம் செய்து தங்களின் தோஷத்தை போக்கிக் கொள்ளலாம்.

- Advertisement -