- Advertisement -

கஷ்டமில்லாத வாழ்க்கை என்பது யாருக்கும் இல்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கஷ்டத்தை அனைவரும் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறோம். அப்படி எந்த ரூபத்தில் கஷ்டம் இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபட்டால் அந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த விநாயகரை எப்படி வழிபட்டால் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் தீரும் என்று தான் பார்க்க போகிறோம்.

முழு முதல் கடவுளாக விளங்க கூடியவர் விநாயகப் பெருமான். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபட்ட பிறகு தான் செய்ய ஆரம்பிப்போம். பலரும் இன்றளவு ஏதாவது ஒன்றை எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாக பிள்ளையார் சுழி போட்டுவிட்டு ஆரம்பிப்பார்கள். இதுவும் ஒரு வகையான விநாயகர் வழிபாடு தான். அப்படி வழிபடுவதன் மூலம் காரிய தடைகள் அனைத்தும் நீங்கி செய்யும் செயல் வெற்றியடையும் என்பது அனைவரின் நம்பிக்கை.

- Advertisement -

அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வலம்புரி விநாயகர் இடம்புரி விநாயகர் என்று இரண்டு விநாயகராக பிரிக்கலாம். தும்பிக்கை வலது புறம் திரும்பி இருந்தால் அவர் வலம்புரி விநாயகர் என்றும், இடதுப்புறம் இருந்தால் அவர் இடம்புரி விநாயகர் என்றும் கூறப்படுகிறது. நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து வகையான கஷ்டங்களையும் தீர்ப்பதற்கு அருள் புரிய கூடியவர் இடம்புரி விநாயகர்.

பெரும்பாலும் இடம்புரி விநாயகரை காண்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட விநாயகரை நாம் வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தீராத கடன், குடும்பப் பிரிவினை, நோய், கஷ்டம், துன்பம், துயரம், காரிய தடை, கல்வித்தடை, தொழில் தடை என்று அனைத்து விதமான கஷ்டங்களும் தடைகளும் விலகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த விநாயகப் பெருமானை பிறந்த நட்சத்திர நாள் அன்று சென்று வழிபட வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது அருகம்புல் மாலையை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் அவருக்கு சந்தன காப்பு செய்து வழிபட வேண்டும். அவ்வாறு சந்தன காப்பு செய்யும் பொழுது அவருடைய தும்பிக்கையின் மேல் வைக்கப்பட்ட சந்தனத்தை அர்ச்சகர் இடம் சொல்லி வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு இந்த சந்தனத்தை தினமும் நெற்றியில் வைத்துக்கொண்டு செல்வதன் மூலம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

தீராத கடன் தீர செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை அன்று காலையில் நான்கு மணி முதல் ஏழு மணிக்குள் இடம்புரி விநாயகரை யார் ஒருவர் தொடர்ச்சியாக வழிபட்டு வருகிறாரோ அவருடைய வாழ்க்கையில் இருக்க கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியாக வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: ராகு கால வழிபாட்டு ரகசியம்

அரிதாக காணப்படக்கூடிய இடம்புரி விநாயகர் எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து அவரிடம் தஞ்சம் புகுபவர்களின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் விலகும் நிம்மதி உண்டாகும்.

- Advertisement -