ராகு கால வழிபாட்டு ரகசியம்

raghu valipadu
- Advertisement -

பாவ கிரகங்கள் என்ற வரிசையில் ராகுவும் கேதுவும் முதலிடம் பிடிக்கிறார்கள் என்று ஜாதகத்தில் கூறப்படுகிறது. அதே சமயம் ராகுவைப் போல் கொடுப்பவரும் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆக ராகு பகவானின் அருள் பரிபூரணமாக நமக்கு சாதகமாக இருந்தால் நம் வாழ்வில் அனைத்து விதமான வெற்றிகளையும் நம்மால் பெற முடியும் என்பதுதான் இந்த கூற்றின் ரகசியம். அப்படிப்பட்ட ராகு பகவானை ராகு காலத்தில் எந்தெந்த முறையில் வழிபட்டால் நம் வாழ்வில் வெற்றிகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாரத்தில் இருக்கும் ஏழு நாட்களும் ஒன்றரை மணி நேரம் ராகு காலம் என்பது இருக்கும். பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வருவார்கள். இதனால் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது. மேலும் இந்த ராகு காலத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயமான முறையில் வெற்றிகள் கிடைக்கும் என்பதுதான் அனுபவபூர்வமான உண்மையாக இருக்கிறது.

- Advertisement -

சரி இந்த ராகு காலத்தில் விளக்கேற்றும் அனைவருக்கும் வெற்றிகள் கிடைக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் ராகு காலத்தில் இருக்கக்கூடிய சூட்சுமங்களை உணர்ந்து அதன் படி யார் விளக்கேற்றுகிறார்களோ அவர்களின் வாழ்க்கையில் தான் வெற்றிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த சூட்சுமங்களை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

பொதுவாக ராகு காலத்தில் தீபமேற்றி வழிபட ஆலயத்துக்கு செல்பவர்கள் துர்க்கை அம்மனுக்கு அபிஷேகத்திற்காக பால் வாங்கி கொடுக்கும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலர் பால் வாங்கி பாம்பு புற்றில் ஊற்றிவிட்டு விளக்கேற்றுவார்கள். இவ்வாறு நாம் பாம்பு புற்றில் பால் ஊற்றி விளக்கேற்றுவதற்கு என்று சில குறிப்பிட்ட நேரங்கள் இருக்கிறது.

- Advertisement -

அதாவது ஒரு நாளில் ஒன்றரை மணி நேரம் ராகு காலம் என்றால் முதல் அரை மணி நேரம் தான் ராகுவிற்கு அபிஷேகம் செய்ய உகந்த நேரமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில்தான் பால் ஊற்ற வேண்டும். அடுத்த அரை மணி நேரம் என்பது அவரை அலங்காரம் செய்வதற்கு உரிய நேரமாகும். அதனால் அந்த நேரத்தில் தான் மஞ்சள் குங்குமம் பூக்கள் என்று அவருக்கு அலங்காரம் செய்ய வேண்டும். அதாவது பாம்பு புற்றிற்கு அலங்காரம் செய்ய வேண்டும்.

கடைசி அரை மணி நேரம் தான் அவர் பக்தர்களை காத்து ரசித்து அருள் புரியக்கூடிய நேரம் என்பதால் அந்த நேரத்தில் தீபம் ஏற்றி வைத்து கற்பூர தீபம் காட்டி நம்முடைய வேண்டுதலை கூற வேண்டும். இப்படி யார் ஒருவர் வழிபாடு மேற்கொள்கிறாரோ அவருடைய வாழ்க்கையில் கண்டிப்பான முறையில் ராகுவால் பல நன்மைகள் கிடைக்கும்.

- Advertisement -

கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள இயலாதவர்கள் தங்கள் வீட்டிலேயே ராகு காலத்தில் கடைசி அரை மணி நேரம் தீபமேற்றி அவருக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியம் கற்கண்டு அல்லது உலர் திராட்சை வைத்து வழிபாடு செய்தாலும் ராகுவின் பரிபூரணமான அருளை பெற முடியும். கோவிலில் விளக்கேற்றுபவர்களாக இருந்தால் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். வீட்டில் விளக்கு ஏற்றுபவர்களாக இருந்தால் தேங்காய் எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பொருளாதார நிலை உயர மகாலட்சுமி வழிபாடு.

இந்த முறையில் பாம்பு புற்றிற்கோ அல்லது துர்க்கை அம்மனுக்கோ ராகு காலத்தில் நாம் பூஜைகள் செய்து வழிபட்டால் நம் வாழ்வில் பல வெற்றிகள் கிடைக்கும்.

- Advertisement -