- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

கஷ்டங்களை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

- Advertisement -

பிரம்மச்சாரியாக திகழக்கூடிய தெய்வங்களுக்கு சக்தி அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பிரம்மச்சாரியாக இருக்கக்கூடிய விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் அதிக அளவில் சக்திகள் உள்ளது. மேலும் காரிய வெற்றி ஏற்பட வேண்டும், காரிய ஜெயம் உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆஞ்சநேயரையும் விநாயகப் பெருமானையும் வழிபாடு செய்வார்கள். அப்படி சக்தி வாய்ந்த தெய்வமாக திகழக்கூடிய ஆஞ்சநேயரை சனிக்கிழமை அன்று எந்த முறையில் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

என்றும் சிரஞ்சீவியாக இன்றளவும் இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு அற்புதமான கடவுளாக திகழக்கூடியவர் ஆஞ்சநேயர். சிறந்த இராம பக்தராக திகழக்கூடிய ஆஞ்சநேயரை நாம் ஆஞ்சநேயர் என்று கூறுவதை விட ராமா என்று கூறினால் ஓடி வந்து விடுவார், அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். இருப்பினும் நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்குரிய வழிபாட்டு முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்படும். எதனால் எந்த நேரத்தில் எந்த கஷ்டம் ஏற்படும் என்பதை நம்மால் உணரவே முடியாது. அதோடு மட்டுமல்லாமல் நவகிரக தோஷம் ஏற்பட்டு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளாலும் பல வகைகளில் கஷ்டப்படுவோம். அப்படிப்பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயருக்கு உகந்த கிழமையாக திகழக்கூடியது சனிக்கிழமை. சனிக்கிழமை அன்று சாதாரணமாகவே ஆஞ்சநேயர் வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கும். அதற்கு காரணம் சனிபகவானுக்குரிய கிழமையான சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரே நாம் வழிபாடு செய்யும்பொழுது சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களும் கஷ்டங்களும் நீங்கும் என்பதுதான். சனி பகவான் மட்டுமல்லாமல் நவகிரகங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிரகத்தின் பாதிப்பையும் நீக்கக்கூடிய வல்லமை படைத்தவராக ஆஞ்சநேயர் திகழ்கிறார்.

- Advertisement -

அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை சனிக்கிழமை அன்று வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். உப்பில்லாத வெண்ணெய் என்று கடையிலிருந்து 50 கிராம் அளவிற்கு வாங்கி சென்று ஆஞ்சநேயருக்கு சாற்றச் சொல்லித் தர வேண்டும். இவ்வாறு தரும் பொழுது அவர்கள் முதலில் ஆஞ்சநேயரின் நெஞ்சில் தான் வைப்பார்கள். இவ்வாறு நெஞ்சில் வைப்பது மூலம் ஆஞ்சநேயர் குளிர்ச்சி அடைவார். அவர் மட்டும் குளிர்ச்சி அடையாமல் அவருடைய நெஞ்சுக்குள் இருக்கக்கூடிய ராமர் சீதா இவர்களும் குளிர்ச்சி அடைவார்கள்.

அப்படி இவர்கள் குளிர்ச்சி அடைந்து மனம் மகிழும் பொழுது அதற்கு காரணமாக இருக்கக்கூடிய நம்முடைய மனமும் மகிழும் அளவிற்கு கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படி நாம் வெண்ணையை வாங்கி ஆஞ்சநேயருக்கு சாற்றுவதன் மூலம் நோய்கள் நிவர்த்தியாகும். ஆயுள் அதிகரிக்கும், வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும், நவகிரக தோஷம் நீங்கும், திருமண தடை விலகும், காரிய ஜெயம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே கடன் பிரச்சினையை தீர்க்கும் ஆவணி சனி பிரதோஷம்

வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் அந்த கஷ்டத்திற்கு விமோசனம் வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பான முறையில் ஆஞ்சநேயருக்கு இந்த முறையில் முழு நம்பிக்கையுடன் வழிபாடு செய்ய அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -