- Advertisement -
சமையல் குறிப்புகள்

கிச்சடி செய்வது எப்படி என்று பார்ப்போம்

காலை சிற்றுண்டி ஒருவருக்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால் பலரும் தங்களுக்கு இருக்கும் நேரமின்மையால் அதை உண்ணாமலே வெளியில் சென்று விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் குறைந்த நேரத்தில் தயாரித்து சாப்பிடும் சிற்றுண்டி கிச்சடி ஆகும். சுவையான கிச்சடியை குறைந்த நேரத்தில் செய்யும் வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கிச்சடி செய்ய தேவையான பொரு‌ட்க‌ள்:

ரவை – 1/2 கிலோ
பட்டாணி – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
தக்காளி – 2
வெங்காயம் – 2
கொத்துமல்லி, கறிவேப்பிலை – ‌சி‌றிதளவு
பட்டை, லவுங்கம் – சிறிதளவு
கடுகு – 1டீஸ்பூன்
கடலை பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி அ‌ல்ல‌து கேச‌ரி பொடி – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – தேவை‌க்கே‌ற்ப
பச்சை மிளகாய் – 4

- Advertisement -

கிச்சடி செய்முறை:

கேரட், பீன்ஸ், போன்றவற்றை சிறிய அளவில் நறுக்கி கொள்ளவேண்டும். அதனுடன் பட்டாணியையும் கலந்து வேக வைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் ரவையை போட்டு மிதமான வெப்பத்தில் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்கு சூடானதும் அதில் கடுகு, கடலை பருப்பு, சீரகம், பட்டை, லவங்கம் மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கப்பட்ட தக்காளி, மற்றும் பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது மஞ்சள் பொடி, கருவேப்பிலை மற்றும் வேக வைத்த காய்கறிகளையும் சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பின்பு அதில் சரியான அளவில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

நீர் நன்கு கொதிக்கும் போது அதில் தேவையான அளவில் உப்பு சேர்த்து கலந்து, அதனுடன் வறுக்கப்பட்ட ரவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறிய படியே இருக்க வேண்டும்.

சில நிமிடங்களில் நீர் வற்றி கிச்சடி கெட்டியாகிய பின்பு, அதை அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது கொத்தமல்லி இலைகளை தூவ சுவையான கிச்சடி தயார்.

சமைக்க ஆகும் நேரம்: 20 நிமிடங்கள்

சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை: 2

இதையும் படிக்கலாமே:
சுவையான தக்காளி சாதம் வெறும் 30 நிமிடத்தில் செய்வது எப்படி

இது போன்ற சமையல் குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kichadi recipe in Tamil language. It is also called as kichadi seivathu eppadi in Tamil or kichadi seimurai in Tamil. Rava kichadi in Tamil language.

- Advertisement -