சுவையான தக்காளி சாதம் வெறும் 30 நிமிடத்தில் செய்வது எப்படி

Tomato-rice

இன்றைய அவசர காலத்தில் நிதானமாக உணவு சமைப்பதற்கு அனைவருக்கும் நேரம் இருப்பதில்லை. அப்படி அவசரமாக இயங்குபவர்கள் குறைந்த நேரத்திலும், அதே நேரத்தில் ஆரோக்கியம் கொண்ட தயாரிக்க கூடிய ஒரு உணவாக தக்காளி சாதம் இருக்கிறது. இங்கே சுவையான தக்காளி சாதம் தயாரிப்பது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.

Thakkali sadam

தக்காளி சாதம் சமைக்க தேவையான பொருட்கள்:

நன்கு உதிரியாக வடிக்கப்பட்ட சாதம் – 1 கோப்பை
தக்காளி – 4/5
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 5/6 பற்கள்
மிளகாய் பொடி -1/4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கிராம்பு – 2
பட்டை – 1 அல்லது 2
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு

சமைப்பதற்கு ஆகும் நேரம்: 30 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை: 1

தக்காளி சாதம் செய்முறை

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழை போன்றவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயையும் நீள வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும்.

அடுப்பில் தீமூட்டி, அதில் வாணலியை வைத்து, அதில் 1 தேக்கரண்டி எண்ணையை ஊற்றி அது காய்ந்ததும் அதில் பச்சைமிளகாய், சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு, அதில் நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் பூண்டின் பற்களை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

Pan with oil

பின்பு இதில் நறுக்கப்பட்ட தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பை சேர்த்து பச்சையான வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கியதும் அந்த வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி, அந்த தக்காளி மற்றும் இதர பொருட்களின் கலவை இளகும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

Thakkali sadam

இந்த கலவை தொக்கு போன்ற பதத்தில் வரும் போது வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் உதிரியான சாதத்தை கலந்து, நன்கு பிரட்டி அதில் கொத்துமல்லி தழைகளை தூவ, சுவையான தக்காளி சாதம் உண்பதற்கு தயாராகிறது.

Thakkali sadam

இதையும் படிக்கலாமே:
சுவையான இடியாப்பம் செய்வது எப்படி

இது போன்ற மேலும் பல சமையல் குறிப்புகள் மற்றும் ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tomato rice recipe in Tamil. It can also be called as Thakkali sadam seimurai in Tamil or Thakkali sadam seivathu eppadi in Tamil. This Thakkali sadam recipe in Tamil is very useful to cook easy food.