- Advertisement -

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க உதவும் தீபம்

- Advertisement -

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாருக்காவது ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தங்களுடைய கையில் இருக்கக்கூடிய பணத்தை கொடுத்து உதவ முயற்சி செய்வார்கள். அப்படி கொடுத்த பிறகு கொடுத்த பணம் திரும்ப கிடைக்காத பட்சத்தில் அதை எப்படி கேட்பது என்று சிலர் யோசித்தாலும் இன்னும் சிலரோ கேட்டாலும் கிடைக்கவில்லை என்று வருத்தப்படும் சூழ்நிலையில் இருப்பார்கள். கொடுத்த பணத்தை திரும்ப கேட்க முடியவில்லை என்பவர்களும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டும் அந்த பணம் வரவில்லை என்பவர்களும் கொடுத்த பணத்தை ஏமாற்றி திரும்பக் கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருப்பவர்களும் இந்த முறையில் எளிமையான பரிகாரத்தை செய்து தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க உதவும் தீபம்

தங்களுக்கு உதவி ஆக இருக்கும் என்பதற்காக பலரும் சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் கஷ்டப்படும் பொழுது அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாமல் தங்களுடைய கையில் இருக்கக்கூடிய பணத்தை கொடுத்து உதவுவார்கள். இப்படி கொடுத்து உதவுபவர்களை உதவியை மறவாமல் அந்த பணத்தை திரும்ப கொடுத்து விட வேண்டும். யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் தங்களுடைய கர்ம வினையின் அடிப்படையில்தான் கடனை வாங்குகிறார்கள் என்பது உறுதி.

- Advertisement -

மேலும் அந்த கடனை திருப்பித் தராமல் ஏமாற்றினால் அந்த கர்ம வினை என்பது அதிகரித்துக் கொண்டு மேலும் மேலும் அவர்களுக்கு கஷ்டத்தையே கொடுக்கும் என்பதால் முடிந்த அளவிற்கு கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி கடன் வாங்கினாலும் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி விட வேண்டும். சரி நாம் கொடுத்த பணம் நமக்கு திரும்ப வரவேண்டும் என்பதற்காக எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தையும் ஒரு ஆலோசனையையும் தெரிந்து கொள்வோம்.

நாம் கொடுத்த பணத்தை திரும்ப வாங்குவதற்காக பலமுறை நேரில் சென்று அவர்களிடம் கேட்டிருப்போம். ஆனால் அவர்களோ இன்று தருகிறேன், நாளை தருகிறேன், அடுத்த மாதம் தருகிறேன் என்று காலம் தாழ்த்திக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஒரு குறிப்பிட்ட நாளில் சென்று நாம் கேட்டோம் என்றால் நாம் கொடுத்த படத்திலிருந்து ஒரு சிறிய தொகையாவது நம்மால் திரும்பி வாங்க முடியும் அந்த தேதியை எப்படி கணக்கிடுவது என்பதை பற்றி பார்ப்போம். இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஒவ்வொருவரும் தங்களுடைய பிறந்த தேதியின் கூட்டுத் தொகையை வைத்து இந்த பணத்தை கேட்கச் செல்ல வேண்டும்.

- Advertisement -

உதாரணமாக ஒருவர் 5/10/2011 என்ற தேதியில் பிறந்திருக்கிறார் என்றால் அவருடைய கூட்டுத்தொகை ஒன்று என்று வரும். அப்பொழுது ஆங்கில மாதத்தில் வரக்கூடிய ஒன்றாம் தேதி அன்று நாம் யாரிடம் பணத்தை கொடுத்தோமோ அவர்களிடம் சென்று கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டால் நமக்கு சிறிதளவாவது பணத்தை திரும்ப தருவார்கள். சரி இதோடு சேர்த்து ஒரு எளிமையான பரிகாரத்தையும் தெரிந்து கொள்வோம்.

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். மாலைக்குள் ராகு காலம், எமகண்டத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் செய்துவிடலாம். அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடியில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அரச மரத்தடிக்கு செல்வதற்கு முன்பாக முதலில் வீட்டில் ஒரு சிறிய அகல் விளக்கை வைத்து அதில் கற்பூரத்தை வைத்து ஏற்றி அந்த கற்பூர புகை ஒரு சில்வர் தட்டில் படும்படி நன்றாக காண்பித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கக்கூடிய கரியில் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்றாக கலந்து மையாக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த மையை நம்முடைய மோதிர விரலில் தொட்டு ஒரு வெள்ளை நிற பேப்பரில் நமக்கு யார் பணம் தர வேண்டுமோ அவர்களின் பெயரை எழுத வேண்டும். அடுத்ததாக அவர்கள் எவ்வளவு பணம் தர வேண்டும் என்பதையும் எழுத வேண்டும்.

- Advertisement -

இப்படி எழுதி முடித்த பிறகு அதை சிறிது நேரம் காய வைத்துக் கொள்ளுங்கள். அது காய்ந்த பிறகு அதை நான்காக மடித்து அரச மரத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இப்பொழுது அரச மரத்தடியில் ஒரு அகல் விளக்கை வைத்து அதற்கு மேல் நாம் எழுதி வைத்திருந்த அந்த பேப்பரை வைத்து அதற்கு மேல் மற்றொரு அகல் விளக்கை வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபமேற்றி அரச மரத்திடம் உங்களுடைய வேண்டுதலை வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 16 சனிக்கிழமைகள் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு விரைவிலேயே அவர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வேண்டிய வரம் தரும் மலர்

இந்த அற்புதமான குறைந்த செலவில் செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை செய்து நாம் கொடுத்த பணத்தை திரும்ப பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -
Published by