- Advertisement -
வீட்டு குறிப்புகள்

இயற்கை கொசு விரட்டி புகையை வீட்டில் போடுவது எப்படி?

- Advertisement -

மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசு தொந்தரவால், நம் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்க இந்த புகையை வீட்டில் போடுங்க போதும். இப்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. கொசுக்களின் எண்ணிக்கை ஏராளமாக அதிகரித்து வருகிறது. மாலை 6.00 மணி ஆகிவிட்டால் போதும். கதவு ஜன்னலை திறந்து வைக்க முடியவில்லை.

கொசு கூட்டம் படையெடுக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்கடியால் காய்ச்சலில் அவதிப்படக்கூடிய சூழ்நிலை. வெறும் காய்ச்சலோடு விட்டுவிட்டால் பரவாயில்லை. அந்த டெங்கு, மலேரியா, என பரவும் அளவுக்கு மிகக் கொடுமையான விஷயம். இந்த கொசுக்களை ஒழித்து கட்ட, கொசுவலை இருந்தாலும், கொசு பேட் இருந்தாலும், ஆல் அவுட், குட்நைட் என்று பல கொசு விரட்டிகள் இருந்தாலும் எப்படியாவது அது நம்மை கடித்து விடுகிறது.

- Advertisement -

இந்த கொசு பிரச்சனையிலிருந்து விடுபட இதை எல்லாம் தவிர இயற்கையாக ஏதாவது ஒரு வழி இருக்குதா. இருக்குதுங்க, சில பேருக்கு இந்த வீட்டு குறிப்பு தெரிந்திருக்கலாம். சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த மழை சீசனில் அந்த பயனுள்ள வீட்டு குறிப்பை நினைவு கூறும் வகையில் இந்த பதிவு.

கொசுவை விரட்டியடிக்க இயற்கையான பொருட்களை வைத்து புகை போடும் முறை

இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் கற்பூரம், பிரியாணி இலை, கிராம்பு, வேப்ப எண்ணெய், கம்ப்யூட்டர் சாம்பிராணி. இந்த ஐந்து பொருட்கள்தான். ஒரு சின்ன பழைய கிண்ணமாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். மண் சட்டியாக இருந்தாலும் சரி, இரும்பு சட்டியாக இருந்தாலும் சரி, அதில் முதலில் இரண்டு கற்பூரம் கட்டிகளை நொறுக்கி போடுங்கள்.

- Advertisement -

சாமிக்கு ஏற்றும் கற்பூரம் தான். அதில் ஒரு கம்ப்யூட்டர் சாம்பிராணியையும் நொறுக்கி போடுங்கள். இரண்டு பிரியாணி இலைகளை கிழித்து போடுங்கள். ஒரு பிரியாணி இலைக்கும் மேலே வேப்பாய் எண்ணெயை நன்றாக தடவி அதில் போட்டு, மீண்டும் ஒரு சூடத்தை வைத்து பற்ற வைத்து விடுங்கள்.

பிறகு எரியும் இந்த நெருப்பில் கொஞ்சமாக வேப்ப எண்ணெயை ஊற்றி, இரண்டு மூன்று கிராம்புகளைப் போட்டு எரிய விடுங்கள். இது அப்படியே நெருப்பு பிடித்து எரிந்து சாம்பலாகி இதிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு புகையானது உங்களுக்கு வெளிவந்து கொண்டே இருக்கும். புகை வரும் சமயத்தில் அந்த புகையை கொண்டு போய் அப்படியே படுக்கை அறையில் வைத்து கதவை மூடிடுங்க.

- Advertisement -

ஆனால் நெருப்பு என்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த புகை உங்களுடைய வீட்டில் மூலை முடுக்குகளில் கூட கொசுவை தங்க விடாது. எல்லா கொசுவையும் அழித்துவிடும். தேவை என்றால் இதன் மேலே கொஞ்சம் சாம்பிராணி தூபத்தை கூட போட்டு விடலாம். வாசனையாக கூடுதல் புகை கிடைக்கும். இதே போல தினமும் மாலை 6 மணிக்கு கதவு ஜன்னல் எல்லாம் அடைத்து விட்டு வீட்டில் புகையை போட்டு பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: கரப்பான் பூச்சி பல்லி வராமல் தடுக்க டிப்ஸ்

இந்த புகையானது நம்முடைய ஆரோக்கியத்திற்கும் இந்த பாதிப்பும் கொடுக்காது. அதே சமயம் கொசுவையும் விரட்டி அடிக்கக்கூடிய சக்தி இதற்கு உண்டு. இதே போல நீங்கள் வேப்ப எண்ணெக்கு பதிலாக காய்ந்த வேப்ப இலைகள் கிடைத்தால் கூட அதை சேகரித்து புகை போடும்போது அந்தப் புகையை உங்கள் வீட்டில் இருக்கும் கொசுக்களை எல்லாம் அழித்துவிடும்.

- Advertisement -