கரப்பான் பூச்சி பல்லி வராமல் தடுக்க டிப்ஸ்

newspaper cockorach
- Advertisement -

வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை சமாளிப்பது ஒரு பெரிய வேலை என்றால் இந்த சின்ன சின்ன பூச்சி கரப்பான் பூச்சி பல்லி போன்றவற்றின் தொல்லைகளை சமாளிப்பது அதை விட பெரிய வேலையாக இருக்கும். கொஞ்சம் அசந்தாலும் சமைத்து வைத்திருக்கும் பொருட்களில் எல்லாம் விழுந்து பாழாக்கி விடும். இவற்றின் நடமாட்டமே நமக்கு ஒரு வித அருவெறுப்பை ஏற்படுத்தும்.

இந்தப் பல்லி, கரப்பான் பூச்சி போன்றவற்றையெல்லாம் அவ்வளவு எளிதில் விரட்டி அடித்து விடவும் முடியாது. அதுவும் இப்போது மழைக்காலம் தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் இவைகளின் அட்டகாசம் அதிகமாகவே இருக்கும். இவைகள் அதிகமாக இருக்கும் இடத்தில் ஒரு வித கெட்ட வாடையும் வரும். இவற்றையெல்லாம் சரி செய்வதற்கான ஒரு சூப்பரான ஐடியாவை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பல்லி கரப்பான் பூச்சி வராமல் தடுக்க

இதற்கு முதலில் கொஞ்சம் நியூஸ் பேப்பர் எடுத்துக் கொள்ளுங்கள். அதை சின்ன சின்ன துண்டுகளாக கிழித்து ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் இதை போட்டு விட்டால் கொஞ்ச நேரத்தில் தண்ணீர் மொத்தமும் நியூஸ் பேப்பர் உரிந்து விடும்.

அதன் பிறகு இதில் அரை டீஸ்பூன் காபித்தூள் போடுங்கள். இதற்கு எந்த காபித்தூள் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்து அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு நாப்தலின் பால் (பாச்சா உருண்டை) அதை பொடி செய்து இத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இதை கலக்கும் போது தண்ணீர் ஊற்ற வேண்டாம். நியூஸ் பேப்பரில் இருக்கும் தண்ணீரே போதும்.

- Advertisement -

அடுத்து இதை சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வீட்டு நிழலில் ஆற விடுங்கள். ஒரே ஒரு இரவு மட்டும் இதை ஆற விட்டால் போதும் நன்றாக காய்ந்து விடும். மறுநாள் இதை எடுத்து கரப்பான் பூச்சி பல்லி வரும் இடங்களில் எல்லாம் வைத்து விடுங்கள். இதை பாட்டிலில் போட்டு வைப்பதாக இருந்தால் மேலே சிறிய துளைகள் போட்டு வையுங்கள்.

அதே போல் இதில் ஒரே ஒரு உருண்டையை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த பிறகு அந்த சாறை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதை சுவர்களில் அதிகமாக பூச்சிகளோ பல்லிகளும் அமரும் இடங்களில் லேசாக ஸ்ப்ரே செய்து விட்டால் போதும். இந்த வாடைக்கு எதுவும் கிட்ட கூட நெருங்காது.

இதையும் படிக்கலாமே: டாய்லெடிலும் சிங்கிலும் இருக்கும் அடைப்பை நீக்க எளிமையான குறிப்பு

கரப்பான் பூச்சி பல்லி போன்றவற்றை ஒழிக்க இது மிக மிக எளிய அதே நேரத்தில் சிறந்த வழியும் கூட. உங்கள் வீட்டிலும் இந்த பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருப்பின் இதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலனை தரும்.

- Advertisement -