- Advertisement -

குடும்ப கஷ்டத்தை நீக்கும் ஏகாதசி தீபம்

- Advertisement -

விரதங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த விரதமாக திகழ்வது ஏகாதசி விரதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். பொதுவாக பலரும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி அன்றுதான் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். ஆனால் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி நாளில் பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஏகாதசியான ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி நாளில் நாம் எந்த முறையில் தீபம் ஏற்றி பெருமாளை வழிபாடு செய்தால் குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு இதில் நாம் பார்க்க போகிறோம்.

ஏகாதசி தீபம் வழிபாடு

பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக ஏகாதசி திதி திகழ்கிறது. பெருமாளுக்கு உகந்த கிழமையாக புதன்கிழமையும், சனிக்கிழமையும் திகழ்கிறது. இந்த முறை வளர்பிறை ஏகாதசி என்பது புதன்கிழமை வருகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள் அல்லவா? அப்படிப்பட்ட புதன்கிழமையோடு ஏகாதசி திதி வருவது என்பது கூடுதல் சிறப்பை தரும். இந்த நாளில் நாம் விரதம் இருக்காவிட்டாலும் பெருமாளை வழிபாடு செய்து விட்டாலே போதும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் தீரும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 9:15 மணியிலிருந்து 10:15 மணிக்குள் அல்லது 10:45 மணியிலிருந்து 11:45 மணிக்குள் அல்லது மாலை 5 30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த தீப வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டில் பெருமாளின் சிலை, விக்ரகம், வலம்புரி சங்கு, சாலிகிராமம் போன்ற பெருமானின் அம்சம் பொருந்திய எது இருந்தாலும் அதற்கு மாலை நேரத்தில் பன்னீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒருவேளை இப்படி பெருமாளின் சொரூபமாக எதுவும் இல்லை என்பவர்கள் பெருமாளின் படத்திற்கு துளசி மாலையை சாற்ற வேண்டும்.

பிறகு பெருமாளுக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து விட்டு ஐந்து அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றி முடித்த பிறகு “ஓம் நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தை 54 முறை கூறி துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம். துளசி இலை கிடைக்கவில்லை என்பவர்கள் வாசனை மிகுந்த மலர்களை வைத்தும் அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த முறையில் பெருமாளுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நம்முடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: செல்வ தடையை நீக்கும் வளர்பிறை ஏகாதசி

காக்கும் கடவுளாக திகழக்கூடிய பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில் பெருமாளுக்கு உரிய புதன்கிழமை அன்று இந்த முறையில் வழிபாடு செய்ய நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -