அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும். பணம் மட்டுமே செல்வமாகாது. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளும் ஒவ்வொரு விதமான செல்வமாக கருதப்படுகிறது. இதில் ஏதாவது ஒன்று நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் அதை நாம் செல்வ தடையாகவே கருத வேண்டும். அப்படிப்பட்ட செல்வத்தடை இருக்க கூடிய நபர்கள் வளர்பிறை ஏகாதசியில் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் அந்த தடைகள் விலகும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வளர்பிறை ஏகாதசி வழிபாடுvalipa
பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக ஏகாதசி திதி திகழ்கிறது. வளர்பிறை தேய்பிறை என்று மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு விதமான பெயர்கள் இருக்கிறது. அந்த ஏகாதசியில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் ஒவ்வொரு விதமான பலன்களும் உண்டாகும். அந்த வகையில் இந்த முறை ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ தடை நீங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த முறை பெருமாளுக்கு உகந்த கிழமையான புதன்கிழமையோடு சேர்ந்து ஏகாதசி திதி வருகிறது என்பது கூடுதல் சிறப்பை தருகிறது. இது செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். இந்த விரதத்தை இருக்க ஆரம்பிக்கும் பொழுது ஒரு வெள்ளை நிற துணியில் ஒரு ஏலக்காய், ஒரு பச்சை கற்பூரம், ஒரு ரூபாய் நாணயம், ஒரு இனுக்கு துளசி போன்றவற்றை வைத்து மூட்டையாக கட்டி பெருமாளின் பாதத்தில் வைத்து விடுங்கள். அன்று முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.
மாலை நேரத்தில் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் பெருமாளுக்கு மாதுளம் பழ முத்துக்கள் போட்ட தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை 106 முறையும் “ஓம் லலிதம் லம்போதரம்” என்னும் மந்திரத்தை 106 முறையும் கூற வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாருக்குரிய மகாலட்சுமி அஷ்டகத்தை ஒரு முறை பாராயணம் செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய செல்வத்தடைகள் அனைத்தும் முற்றிலும் நீங்க வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
வழிப்பாட்டை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த தயிர் சாதத்தை ஏதாவது ஒரு பெண் குழந்தைக்கு பிரசாதமாக தர வேண்டும். மீதம் இருப்பதை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பெருமாளின் பாதத்தில் வைத்த வெள்ளை மூட்டையை பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இதை அடுத்த ஏகாதசி திதிக்கு திறந்து அதில் இருக்கக்கூடிய துளசி இலையை மட்டும் மாற்றி புதிதாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கேட்டதை கொடுக்கும் முருகன் வழிபாடு
பதினாறு செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் வளர்பிறை ஏகாதசி திதியில் இப்படி பெருமாளை வழிபாடு செய்து மகிழ்ச்சியாக வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.