- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் குறைய

- Advertisement -

உங்க குடும்பத்தில் அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கிறதா. இந்த பரிகாரம் உங்களுக்காக தான். கோவிலுக்கு போகும் போது இந்த ஒரு காரியத்தை செய்தாலே போதும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் கணவன் மனைவி பிரச்சினைகள் சரியாகும். அது என்ன பரிகாரம் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

கணவன் மனைவி சண்டை விலக

பெரிய பெரிய புண்ணிய ஸ்தலத்திற்கு எல்லாம் செல்லும்போது, அங்கிருந்து தம்பதி சரீரமாக, கணவன் மனைவியாக ஒற்றுமையாக இருக்கக்கூடிய கடவுளின் திருவுருவப்படத்தை வாங்கி வந்து, சண்டை போடும் கணவன் மனைவிக்கு பரிசாக கொடுத்தால், அந்த வீட்டில் சண்டை வராது. பரிகாரம் சொல்லுவது கொஞ்சம் புதுசாக உங்களுக்கு தெரியலாம். இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு பின்னால் நிறைய பவர் இருக்கு.

- Advertisement -

உங்கள் குடும்பத்திலேயே கணவன் மனைவிக்குள் பிரச்சனை, உங்களுடைய கணவன் உங்களை புரிந்து கொள்ளவில்லை, உங்களுடைய மனைவி உங்களை புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் கணவன் மனைவியாக ஒன்றாக இருக்கும் ஒரு இறைவனின் சிலையையோ அல்லது படத்தையோ வாங்கிக் கொண்டுவந்து, இன்னொரு தம்பதியருக்கு தானம் கொடுத்தால், உங்களுடைய குடும்பத்திலும் ஒற்றுமை வரும். நீங்கள் தானமாக கொடுத்தீர்கள் அல்லவா, அந்த தானத்தை பெற்றவர்களுடைய குடும்பத்திலும் சந்தோஷம் வரும் என்பது நம்பிக்கை.

உதாரணத்திற்கு திருப்பதி போறீங்க. பெருமாள் தாயாரோடு இருக்கக்கூடிய திரு உருவப் படமோ சிலையோ வாங்கி தெரிந்தவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம். சிவன் கோவிலுக்கு போறீங்க. அங்க சிவன் பார்வதி ஒன்றாக இருக்கும் திருவுருவப்படம் இருந்தால், அதை வாங்கி வந்து தெரிந்தவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம். மதுரை சென்றால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் படம். இப்படி எந்தெந்த ஊருக்கு எந்தெந்த தெய்வங்கள் சிறப்போ அந்தந்த தெய்வங்களை ஜோடியாக இருக்கும்படி பார்த்து வாங்கிக்கோங்க.

- Advertisement -

காரணம் இப்படி பிரபல்யமாக இருக்கக்கூடிய புண்ணிய ஸ்தலங்களில் எந்த நேரமும் மந்திர ஜெபங்கள், இறைவனின் நாமங்கள், பாடல்கள் உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு திருப்பதியில் எந்த திசையில் திரும்பினாலும் நாராயணா கோவிந்தா கோவிந்தா என்ற நாமம் கேட்கும்.

இந்த நாமத்தை எல்லாம் அங்கு இருக்கும் சிலைகளும், தெய்வத்தின் ஒரு திருவுருவப் படங்களும் தன்னகத்தே உள்வாங்கி இருக்கும். அப்படிப்பட்ட இடங்களிலிருந்து இப்படிப்பட்ட சுவாமி படங்களை நாம் வாங்கும் போது, அந்த பொருட்களுக்கு இருக்கக்கூடிய மகிமை இரட்டிப்பாக நமக்கு கிடைக்கும். அந்த மகிமையை நாம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

- Advertisement -

நமக்கு நடக்கும் நன்மை நாலு பேருக்கு நடந்தால் இன்னும் நல்லது தானே. ஆகவே இப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கெல்லாம் செல்லும்போது இறைவனின் பரிசு பொருட்களை வாங்கி அடுத்தவர்களுக்கு கொடுக்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டால், உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும் என்பது நம்பிக்கை. தனியாக இருக்கும் இறைவனை வாங்காதீங்க.

இதையும் படிக்கலாமே: அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற

எப்போதுமே குடும்பத்தோடு மனைவியோடு சந்தோஷமாக இருக்கும் கடவுள் சிலைகளை திருவுருவப் படங்களை வாங்கி அடுத்தவர்களுக்கு கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -