- Advertisement -

குடும்ப சந்தோஷத்திற்கு சித்ரா பௌர்ணமி வழிபாடு

நம்முடைய மனசு எப்போதுமே தெளிவாக இருந்தால், வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது எந்த ஒரு முடிவையும் தவறாக எடுக்க மாட்டோம். பிரச்சனைக்கு உண்டான சரியான முடிவை எடுப்பவர்கள் வாழ்க்கையில், நிம்மதி பறி போகாது. ஆனால் இன்று இருக்கக்கூடிய மனிதர்கள் பெரும்பாலும் செய்யக்கூடிய தவறு, ஒரு பிரச்சனை என்று வரும்போது பதட்டத்தில், அதற்கு உண்டான சரியான முடிவை எடுக்காமல் விடுவதுதான் காரணம்.

பதட்டம் மன குழப்பம், எதிலுமே ஒரு தெளிவு இல்லாமல் செயல்படும்போது, நமக்கு பிரச்சனை வந்து விடுகிறது. குடும்பத்தின் நிம்மதி கெட்டுப் போகிறது. இந்த மன குழப்பத்தை கொடுப்பது மனோ காரணமான சந்திரன். உங்களுடைய மன குழப்பத்திலிருந்து விடுபட, எந்த பிரச்சனை வந்தாலும், தெளிவான முடிவை எடுக்க, சித்ரா பௌர்ணமி தினமான இன்று, சந்திர உதயத்தின் போது நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில், சந்திரனின் ஒளி பிரகாசமாக உதயமாகும் போது, சந்திரனின் ஒளி இந்த பூமியில் விழும் போது, அந்த பிரகாசமான ஒளி உங்கள் மீது விழ வேண்டும். எவ்வளவு நேரம் உங்களால் சந்திரனின் ஒளியில் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருங்க. இன்று குடும்பத்தோடு நிலவு ஒளியில் நேரத்தை செலவு செய்யுங்கள்.

இதனால் தான் இன்று எல்லோரும் குடும்பத்தோடு நிலவெளியில் சாப்பிட வேண்டும் என்ற சாஸ்திரத்தை நமக்கு முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இன்று சந்திர பகவானின் ஒளி உங்கள் மீது எந்த அளவுக்கு விழுகின்றதோ, அந்த அளவுக்கு சந்திரனின் சக்தியை உங்களுடைய உடம்பு உள்வாங்கிக் கொள்ளும்.

- Advertisement -

இந்த வருடம் முழுவதும் அந்த சந்திர பகவானின் ஆற்றல் உங்கள் உடம்புக்குள்ளேயே இருக்கும். ஏனென்றால் அவ்வளவு பவர் நில ஒளியில் இருந்து இன்று பூமிக்கு வரும். இதை நீங்கள் ஆன்மீக ரீதியாக செய்தாலும் சரி, அறிவியல் ரீதியாக செய்தாலும் சரி, அது உங்களுடைய இஷ்டம். இந்த நிலவு ஒளியில் அமர்ந்து ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நோட்டுப் புத்தகத்தில் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை 108 முறை எழுதுங்கள்.

குடும்பத்தோடு நிலவு ஒலியில் அமர்ந்து சாப்பிடும் போது எல்லோரும் இந்த ராம நாமத்தை மனதார ஒரு முறையாவது உச்சரியுங்கள். சாதாரணமாக ராம மந்திரத்தை உச்சரித்தாலே பல மடங்கு நல்லது நமக்கு நடக்கும். இந்த சித்ரா பௌர்ணமி நில ஒளியில் ராம மந்திரம் உச்சரிக்கும் போது பல மடங்கு நல்ல சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவும்.

- Advertisement -

ராம மந்திரம் நம்முடைய மனதை ஒரு நிலை படுத்தக்கூடிய மந்திரம். இந்த ராம மந்திரத்தின் சிறப்புகளைப் பற்றி மகா பெரியவா அவர்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். கஷ்டம் என்று வரும் தன்னுடைய பக்தர்களுக்கு அவர் கொடுக்கும் மருந்து இந்த ராம நாமம் தான்.

இதையும் படிக்கலாமே: சித்ரா பௌர்ணமி சோடசகலை நேரம்

இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில் நிலா ஒளியில் அமர்ந்து இந்த ராம நாமத்தை நீங்கள் எழுதும் போது, ராம நாமத்தில் மனதார சொல்லும் போது, உங்களுடைய பாவங்களும் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு இன்று மாலை அனைவரும் குடும்பத்தோடு சேர்ந்து நிலா வெளிச்சத்தில் நேரத்தைக் செலவு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -