
மனிதர்களாக பிறவி எடுத்து விட்டோம் என்றாலே, அந்த வாழ்க்கை போராட்டமாக தான் செல்லும். நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரிக்கும். வேலையில் பிரஷர். குடும்பத்திற்காக ஓடாக தேய்ந்து உழைக்கின்றோம். ஆனாலும் மனதில் நிம்மதி இல்லை. குடும்பத்தில் பிரச்சனைகள் ஓய்ந்ததாக தெரியவில்லை.
இப்படி வாழ்க்கையில் வரக்கூடிய போராட்டங்களை எதிர்கொள்ள மன தைரியமும் இல்லை. தூங்க நேரமில்லை. தூங்கலாம் என்று படுத்தால் கண்களில் தூக்கம் வரவில்லை. காரணம் மன நிம்மதி இல்லை. இப்படி அனுதினமும் நீங்கள் புலம்பிக்கொண்டே இருக்கிறீர்களா. உங்களுக்கான ஆன்மீகம் சார்ந்த வழிபாடு தான் இது.
எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனையிலிருந்து சுலபமாக உங்களை வெளியே கொண்டு வர கூடிய சக்தி குல தெய்வத்திற்குத்தான் இருக்கிறது. அனுதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி விட்டு உங்களுடைய நாளை தொடங்கி பாருங்கள். நிச்சயம் அந்த நாள் போராட்டம் நிறைந்த நாளாகவே இருந்தாலும், உங்களுக்கு நல்லது நடக்கும்.
போராட்டத்தை எதிர்கொள்ள கூடிய தைரியம் உங்களுக்கு கிடைக்கும். அந்த வகையில் தினமும் காலையில் 5:00 மணிக்கு இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும். ஐந்து மணிக்கு எழுந்து குளித்துவிட்டு பூஜை அறைக்கு வாங்க. பூஜை அறை கதவை திறங்க. ஸ்கிரீனை விளக்குங்கள். உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 11 முறை சொல்லுங்கள்.
உங்கள் குலதெய்வம் பழனி முருகனா. பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா என்று 11 முறை சொல்லலாம். முருகா முருகா என்ற நாமத்தை 11 முறை சொல்லலாம். உங்கள் குலதெய்வம் ஐயனாரா அய்யனாரே இன்னைக்கு என்னை காப்பாற்றப்பா என்று பதினோருமுறை சொல்லுங்கள். இப்படி 11 முறை உங்கள் சவுகரியபடி குலதெய்வத்தின் பெயரைச் சொல்லிவிட்டு அந்த நாளை துவங்கிப் பாருங்கள். அந்த நாள் ஜாம் ஜாம் என்று ஓஹோ என சூப்பரா போகும். பிரச்சனைகள் வராது. அப்படியே பிரச்சினைகள் வந்தாலும் அதை சுலபமாக சமாளிக்க கூடிய தைரியமும் உங்களிடத்தில் இருக்கும்.
இரவு படுத்தால் தூக்கம் வரவில்லை. தூங்க செல்வதற்கு முன்பு கண்களை மூடிக்கொண்டே குலதெய்வத்தின் நாமத்தை 11 முறை சொல்லுங்கள். அந்த குல தெய்வமே வந்து தாலாட்டி உங்களை தூங்க வைத்து விடும். எப்படித்தான் இன்று இரவு தூங்கினேன் என்று தெரியவில்லை. அப்படி ஒரு தூக்கம் வரும். காலையில் எழுந்தவுடன் மனதை லேசாகிவிட்டது என்று நீங்களே உங்கள் மனதிற்குள் நினைத்துக் கொள்வீர்கள்.
இதெல்லாம் வெறும் வார்த்தைக்காக சொல்ல கூடிய விஷயங்கள் அல்ல. உண்மையில் நிறைய பேர் அனுப்பூர்வமாக கண்ட உண்மைகள். நம்பிக்கையோடு இதை பின்பற்றுபவர்களுக்கு நிச்சயம் ஒவ்வொரு நாளும் நரகமாக செல்லாது. இந்த பூமி அழகாக தெரியும். மனதில் இருக்கும் பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும். எப்போதுமே உங்கள் மனசி லேசாகும்.
இதையும் படிக்கலாமே: தடைகளை தகர்த்தெறியும் குலதெய்வ தீபம்
நம்பிக்கை உள்ளவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் ஆன்மீகம் சார்ந்த பதிவு இது. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்லதுக்கு மேல் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.