- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

தொட்ட காரியம் துலங்க மஞ்சள் கிழங்கு பரிகாரம்

ஒவ்வொருவரும் அவருடைய அன்றாட வாழ்க்கையில் சில முக்கியமான வேலைக்காக வெளியில் செல்வார்கள். அவ்வாறு செல்லும் பொழுது அந்த வேலையில் முழுமையான வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்கள் தங்களுடைய காரிய வெற்றியை மேம்படுத்துவதற்கு மஞ்சள் கிழங்கை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கையில் அவர் தொட்டது அனைத்தும் துலங்க வேண்டும் என்றால் அவருக்கு சுக்கிர திசை என்பது இருக்க வேண்டும். அதாவது சுக்கிரனின் அருள் இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் குரு பகவானின் பார்வையும் நன்மையாக இருக்க வேண்டும். இப்படி இவர்கள் இருவரின் அனுக்கிரகமும் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர் நினைத்தது நடக்கும். தொட்டது துலங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்தவித தடைகள் வந்தாலும் அவை அனைத்தும் தவிடு பொடி ஆகும். இப்படி இவர்கள் இருவரின் அருளாசியை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக குரு பகவானின் பரிபூரணமான அனுக்கிரகம் பெற்ற பொருளாக திகழ்வது மஞ்சள். மஞ்சளை நாம் நம்முடன் எடுத்துச் செல்லும் பொழுது அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று கூறுவார்கள். அதனால் தான் விநாயகரை கூட மஞ்சளில் பிடித்து வைத்து வழிபாடு செய்தார்கள். அப்படிப்பட்ட மஞ்சள் கிழங்கு ஒன்றை நாம் எப்படி பயன்படுத்தினால் சுக்கிரன் மற்றும் குரு பகவானின் அருளை பெற முடியும் என்று பார்ப்போம்.

ஒரு மஞ்சள் கிழங்கை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது குண்டு மஞ்சளாக இருக்க வேண்டும். விரலி மஞ்சளாக இருக்கக்கூடாது. இந்த மஞ்சளை எந்த காரியமாக இருந்தாலும் செல்வதற்கு முன்பாக வரக்கூடிய சுக்கிர ஹோரையில் நம்முடைய தொப்புளில் ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். நம்முடைய உடலில் இருக்கக்கூடிய அனைத்து விதமான நரம்புகளும் தொப்புளில் தான் ஒன்று சேர்கிறது என்று கூறப்படுகிறது. அந்த தொப்புளில் நாம் குரு அம்சம் பொருந்திய மஞ்சள் கிழங்கை ஐந்து நிமிடம் வைப்பதன் மூலம் நமக்கு சுக்கிரன் மற்றும் குருபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஐந்து நிமிடம் வைத்துவிட்டு பிறகு அந்த மஞ்சள் கிழங்கை அப்படியே எடுத்து தனியாக வைத்து விடுங்கள். பிறகு நீங்கள் உங்கள் காரியத்திற்கு செல்லலாம். இப்படி செல்வதன் மூலம் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். இந்த மஞ்சள் கிழங்கை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. மேலும் இந்த மஞ்சள் கிழங்கில் பூச்சிகள் வைக்கும் வரை இதை நாம் பயன்படுத்தலாம். பூச்சிகள் வைத்துவிட்டால் அதை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிய மஞ்சள் கிழங்கை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு

நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய இந்த தாந்திரீகமான பரிகாரத்தை நாமும் பின்பற்றி நம் வாழ்வில் சுக்கிரன் மற்றும் குரு பகவானின் அருளை பெற்று அனைத்து விதமான மங்களங்களையும் பெறுவோம்.

- Advertisement -