காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு

kamatchi amman vilakku
- Advertisement -

ஒருவருடைய வீட்டில் கண்டிப்பாக முறையில் பூஜை அறை என்பது இருக்கும். அந்த பூஜை அறையில் விளக்கேற்றும் பழக்கமும் இருக்கும். தினமும் விளக்கேற்ற விட்டாலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது விளக்கேற்றும் வழக்கம் இருக்கும். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று கண்டிப்பான முறையில் வீட்டில் விளக்கேற்றுவார்கள். இப்படி நாம் விளக்கேற்ற உபயோகப்படுத்தும் விளக்கானது ஒன்று அஷ்ட லட்சுமி விளக்காகவோ அல்லது காமாட்சி விளக்காகவோ இருக்கும். இப்படி ஏற்றக்கூடிய விளக்கில் நாம் எந்த முறையில் தீபம் ஏற்றி நம்முடைய வேண்டுதலை வைத்தால் அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

விளக்குகள் பல வகைகளில் இருந்தாலும் அதில் மிகவும் குறிப்பிடத்தக்க விளக்குகளாக இருப்பது அஷ்டலட்சுமி விளக்கு மற்றும் காமாட்சி விளக்கு. இவை இரண்டில் ஏதாவது ஒன்று கண்டிப்பான முறையில் அனைவரும் இல்லங்களிலும் இருக்கும். அஷ்டலஷ்மிகள் விளக்கு என்று பார்க்கும் பொழுது அந்த விளக்கில் அஷ்டலட்சுமிகளும் இருப்பார்கள். அஷ்டலஷ்மிகள் ஆகவே பாதித்து அந்த விளக்கை நாம் ஏற்ற வேண்டும். இதே போல் காமாட்சியம்மன் விளக்கில் காமாட்சி அம்மன் இருப்பார்கள். காமாட்சி அம்மன் விளக்கை நாம் வழிபாடு செய்தோம் என்றால் அந்த விளக்கில் காமாட்சி அம்மனே வந்து வீற்றிருந்து நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறுமா நிறைவேறாதா என்று கூறுவார்கள்.

- Advertisement -

பொதுவாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை சாமான்களை விலக்கக்கூடாது என்பது பலரும் அறிந்ததே. அதேபோல் புதன்கிழமை அன்றும் நாம் விளக்கை விலக்கி சுத்தம் செய்யக்கூடாது. காரணம் புதன் கிடைத்தாலும் பொன் கிடைக்காது என்று கூறுவார்கள். புதன்கிழமை அன்று நாம் பூஜை பொருட்களை சுத்தம் செய்வதன் மூலம் பெருமாளின் அனுக்கிரகத்தை பெற இயலாமல் போய்விடும் என்பதால் புதன்கிழமையும் பூஜை சாமான்களை சுத்தம் செய்யக்கூடாது. சரி இப்பொழுது காமாட்சி அம்மன் விளக்கு வழிபாட்டை பற்றி பார்ப்போம்

காமாட்சியம்மன் விளக்கை நாம் சுத்தம் செய்த பிறகு சந்தனம் குங்குமம் வைத்து ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் ஒரு சிலர் பச்சரிசியை போட்டு அதற்குமேல் காமாட்சி அம்மன் விளக்கை வைத்து தீபம் ஏற்றுவார்கள். இப்படி ஏற்றுவதற்கு பதிலாக காமாட்சி அம்மன் விளக்கை சுத்தம் செய்துவிட்டு பூஜை பொருட்கள் விற்கும் கடையில் ஜவ்வாது பேஸ்ட் என்று விற்கப்படும் அந்த பேஸ்ட்டை வாங்கி வந்து காமாட்சி அம்மன் விளக்கு முழுவதும் அதாவது காமாட்சி அம்மன் இருக்கும் இடத்தில் முழுமையாக தடவ வேண்டும்.

- Advertisement -

பிறகு அதில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். ஜவ்வாது பேஸ்ட் கிடைக்காத பட்சத்தில் சந்தன வைக்கும் பொழுது அந்த சந்தனத்துடன் ஜவ்வாது கொடியை சேர்த்தும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்திற்கும் சந்தன குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். மா இலைகளை பறித்து வரவேண்டும். இந்த மா இலைகளை சுத்தம் செய்து அதற்கும் சந்தனம் குங்குமம் இட்டு அந்த தாம்பாளத்தை சுற்றி வட்ட வடிவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு நடுவில் காமாட்சி அம்மன் விளக்கை வைக்க வேண்டும். பிறகு மலர்களால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த விளக்கில் விளக்கெண்ணையை ஊற்றி அதாவது ஆமணக்கு எண்ணையை ஊற்ற வேண்டும். அடுத்ததாக சிவப்பு நிற திரியை போட வேண்டும். குங்குமத்தில் சிறிது பன்னீரை ஊற்றி குழைத்து விட்டு அதில் பஞ்சுத்திரி போட்டு நனைத்து உலர வைத்து எடுத்து அதை உபயோகப்படுத்துங்கள். கடைகளில் இருந்து வாங்கக்கூடிய சிவப்பு திரியை உபயோகப்படுத்த வேண்டாம்.

- Advertisement -

இப்படி சிவப்பு திரியை போட்டு தீபம் ஏற்றிவிட்டு அந்த தீபத்தை காமாட்சி அம்மனாக நினைத்து மனதார உங்களுடைய வேண்டுதலை நீங்கள் கூற வேண்டும். அவ்வாறு கூறும் பொழுது அந்த தீபச்சுடர் ஒளியில் காமாட்சி அம்மனே வந்து வீற்றிருந்து உங்களுடைய வேண்டுதல் நடக்குமா நடக்காதா என்று கூறிவிடுவார்கள். தீபமானது வலது புறமாக சாய்ந்தால் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்றும் இடது புறமாக சாய்ந்தால் நிறைவேறாது என்றும் இருபுறமும் மாறி மாறி சாய்ந்தால் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறுவதில் தடங்கல்கள் ஏற்படும் என்றும் அர்த்தம்.

இதையும் படிக்கலாமே: மே மாத தேய்பிறை அஷ்டமி திதி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த காமாட்சி அம்மன் விளக்கு வழிபாட்டை மேற்கொண்டு நம்முடைய வேண்டுதல் நிறைவேறுமா நிறைவேறாதா என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

- Advertisement -