- Advertisement -
அபிஷேகம்

அட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம்

அட்சய திருதியை நாள் என்பது லட்சுமி தேவிக்கும், குபேரனனுக்கு, லட்சுமி நாராயணருக்கும் உகந்த ஒரு சிறப்பான நாள் ஆகும். அட்சய திருதியை நாளில் காலையில் பூஜை செய்துவிட்டு அருகில் உள்ள லட்சுமி கோவிலிற்கோ அல்லது லட்சுமி நரசிம்மர் கோவிலிற்கோ செல்வது நல்ல பலன் தரும். அந்த வகையில் லட்சுமி நரசிம்மருக்கு நடந்த பிரத்யேக அபிஷேக வீடியோ இதோ.

அட்சய திருதியை நாளில் லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் தீராத கடன் பிரச்சனை தீர்வதற்கான வழிகள் பிறக்கும். ‘ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹாய நம’ என்ற மந்திரத்தை கூறி அவரை வழிபடுவது நமக்கு சிறப்பு சேர்க்கும். இன்றைய தினத்தில் வேலை காரணமாக சிலரால் கோயிலிற்கு சென்றிருக்க முடியாது. அது போன்ற நிலையில் நாம் இருக்கும் இடத்தில் அமர்ந்தவாறே நரசிம்மரை நினைத்து ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹாய நம என்ற மந்திரத்தை 108 முறை ஜபித்து மனதில் வழிபடலாம்.

- Advertisement -

நரசிம்மர் தூணிலும் இருப்பர் துரும்பிலும் இருப்பார் என்பதை நாம் பிரகலநாதன் கதையில் இருந்து உணர்ந்திருப்போம். ஆகையால் எங்கும் நிறைந்த இறைவனை இந்த நொடியே நாம் இருக்கும் இடத்தில் இருந்தே வழிபட்டு அருள் பெறுவோம்.

- Advertisement -