- Advertisement -

அனைத்து செல்வங்களும் கிடைக்க மகாலட்சுமி வழிபாடு

- Advertisement -

தீராத வறுமை நிலையில் இருப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று பலரும் கூறி இருப்பார்கள். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கு என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. இருப்பினும் 21 நாட்கள் மட்டும் தொடர்ச்சியாக மகாலட்சுமி தாயாரை வழிபட்டால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமை நிலை மாறும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையைப் பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமி வழிபாடு

எந்த ஒரு தெய்வத்தின் அருளை நாம் பெறுவதாக இருந்தாலும் முதலில் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும் என்று கூறுவோம். எந்த அளவிற்கு குலதெய்வ வழிபாட்டை நாம் செய்கிறோமோ அதே அளவிற்கு மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டையும் நாம் மேற்கொள்ள வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருட்பார்வை நம் மீது பட்டு விட்டால் எப்பேற்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டம் நீங்குவதோடு மற்ற பிற தெய்வங்களின் அருளையும் நம்மால் பெற முடியும்.

- Advertisement -

அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயார் ஒரு இடத்தில் நிலையாக இருக்க மாட்டார் இந்த பூலோகத்தில் ப்ரகு முனிவரின் மகளாக அவதரித்த போது முனிவர் தன் மகளிடம் ஒரு இடத்தில் நிலையாக இருக்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறாயே உன்னை நிலையாக இருக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட பொழுது மகாலட்சுமி தாயார் பல வழிமுறைகளை சொன்னார்களாம். அதில் ஒன்று இரண்டை பார்ப்போம். எந்த இடத்தில் கடல் அலை ஓசை கேட்கிறதோ அந்த இடத்தில் இருப்பார்களாம். எந்த இடத்தில் பசுமாட்டின் வாசம் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பார்களாம்.

அதாவது பசுஞ்சாணம், கோமூத்திரம் போன்றவை இந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் இருப்பாராம். அதேபோல் பெண்கள் எந்த வீட்டில் அழகாக தங்களை அலங்கரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் இருப்பாராம். அதேபோல் அனுதினமும் யார் ஒருவர் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்கிறார்களோ அந்த வீட்டிலும் இருப்பார்கள் என்று மகாலட்சுமி தாயார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதனால் நாம் மகாலட்சுமி தாயாரை அனுதினமும் வழிபட வேண்டும். அப்பொழுதுதான் மஹாலக்ஷ்மி தாயார் நம்முடைய வீட்டில் நிரந்தரமாக நிலைத்திருப்பார்கள். சரி இப்பொழுது பதிவிற்கு வருவோம். இந்த வழிபாட்டை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் செய்வது என்பது மிகவும் சிறப்பு. காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு தன்னை எந்த அளவிற்கு அலங்காரம் படுத்திக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு அலங்காரம் படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது பூஜை அறைக்கு வந்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய கண்ணாடியை வைத்துக் கொள்ளுங்கள். அந்த கண்ணாடிக்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாள தட்டில் அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி தாமரைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். நெய் கிடைக்காதவர்கள் விளக்கெண்ணையில் தீபம் ஏற்றலாம். தாமரை தண்டு கிடைக்காதவர்கள் பஞ்சுத்திரியில் தீபம் ஏற்றலாம்.

- Advertisement -

பிறகு மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக பால் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு மகாலட்சுமி தாயார் உடைய கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளைகளும் இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை நாம் பாராயணம் செய்தால் நம் வாழ்க்கையில் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது என்று ஆதிசங்கரர் கூறியிருக்கிறார்.

நாம் காலையிலும் மாலையிலும் இரண்டு வேலை மட்டும் தொடர்ச்சியாக 21 நாட்கள் மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு இந்த முறையில் கனகதாரா ஸ்தோத்திரத்தை கூற வேண்டும். கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு மகாலட்சுமி தாயாரை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் 21 நாட்கள் முடிந்த பிறகு செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை உணர முடியும். பலரும் அனுபவபூர்வமாக கண்ட உண்மையாகத்தான் இது திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே:பெண்கள் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை முழுமனதோடு மகாலட்சுமி தாயாரை நம்பி அனுதினமும் உச்சரிப்பவர்களுடைய வாழ்க்கையில் செல்வநிலை உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

- Advertisement -