
சிவபெருமானுக்கு உகந்த தினமாக கருதப்படுவது பிரதோஷம். இந்த பிரதோஷம் என்பது மாதத்தில் இரண்டு முறை வரும் என்று நம் அனைவருக்குமே தெரியும். பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் நமக்கு தெரியும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரதோஷ நாள் என்பது கார்த்திகை மாதம் 13-ஆம் தேதி நவம்பர் மாதம் 28ஆம் தேதி வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த மாதத்தில் சிவபெருமானுக்குரிய நாளான பிரதோஷ நாள் என்பது வருகிறது என்பது கூடுதல் சிறப்பை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய சிவபெருமான் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் என்பது வரும். அந்த மாதத்திற்கு ஏற்றார் போல் அந்த பிரதோஷத்தின் மகிமை என்பது மாறுபடும். அந்த வகையில் சிவபெருமானுக்குரிய மாதமான கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பிரதோஷத்திற்கு அதிக பலன் இருக்கிறது. மேலும் கூடுதலாக இந்த பிரதோஷம் வியாழக்கிழமையில் சேர்ந்து வருகிறது என்பதால் குரு பகவானின் அருளையும் சிவபெருமானின் அருளையும் நம்மால் எளிதில் பெற முடியும். இவர்களின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை வியாழக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம். அல்லது காலை 7:30 மணியிலிருந்து 11:45 வரை செல்லலாம். அல்லது மாலை 4 30 மணியிலிருந்து 9:30 மணி வரை செய்யலாம். வீட்டில் சிவலிங்கம் இருக்கும் பட்சத்தில் அந்த சிவலிங்கத்திற்கு மஞ்சள் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். குரு பகவானுக்குரிய மஞ்சளை பயன்படுத்தி மஞ்சள் கலந்த தண்ணீரால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது சிவபெருமானின் அருளால் நமக்கு அனைத்து விதமான மங்கலங்களும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அன்றைய தினம் சிவபெருமானுக்கு புளி சாதத்தை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு சிவபெருமானுக்கு முன்பாக அகல் விளக்கில் நெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு வில்பத்தை பயன்படுத்தி “ஓம் ஹர ஹர மகாதேவாய நமஹ” என்னும் மந்திரத்தை கூறி 108 முறை சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். வீட்டில் சிவலிங்கம் இல்லை என்பவர்கள் சிவபெருமானின் படத்திற்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வில்வ இலை கிடைக்கவில்லை என்பவர்கள் வாசனை நிறைந்த மலர்களை பயன்படுத்தியோ அல்லது விபூதியை பயன்படுத்தியோ சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:நல்ல வரன் அமைய தீபம்
இந்த முறையில் சிவபெருமானுக்கு அபிஷேக அர்ச்சனை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருளும் குரு பகவானின் அருளும் கிடைக்க பெற்று அனைத்து விதமான மங்களங்களும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.