- Advertisement -
- Advertisement -

சில பேருக்கு வாழ்நாள் முழுவதும் பணம் கஷ்டம் இருக்கும். சில பேருக்கு மாத துவக்கத்தில் கொஞ்சம் பணப்புழக்கம் இருக்கும். மாத இறுதியில் தான் பணத்திற்கு கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சில பேருக்கு கடன் தொல்லையால் மிகப்பெரிய தொந்தரவு இருக்கும். சில பேருக்கு வருமானத்திற்கு வழி இருக்காது.

உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை எது இருந்தாலும் சரி, அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று நாளைய தினம் வரவிருக்கும் வளர்பிறை ஏகாதேசியில் பெருமாளை வழிபாடு செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளை எந்த முறையில் வழிபாடு செய்தால் பண பிரச்சினை தீரும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வளர்பிறை ஏகாதசி வழிபாடு

இது மாசி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி 10-3-2025 ஆம் நாள் திங்கட்கிழமை வளர்பிறை ஏகாதசியானது வரவிருக்கிறது. காலை 8 மணிக்கு முன்பு உங்களுக்கு நேரம் கிடைத்தால், பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் மாலை சூர்ய அஸ்தமனத்திற்கு பிறகு கூட பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

முடிந்தால் நெய் தீபம் ஏற்றுங்கள். முடியாதவர்கள்  நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். முடிந்தவர்கள் நாளைய தினம் காலையில் இருந்தே உபவாசம் இருக்கலாம். ஒரு வேலை உணவு சாப்பிட்டு ஒரு பொழுது இருக்கலாம். அது உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்தது. முடியாதவர்கள் எப்போதும் போல சைவ உணவுகளை சாப்பிட்டு சுத்தபத்தமாக இருந்து இந்த பூஜையை செய்யலாம் தவறு இல்லை.

- Advertisement -

சரி தீபம் ஏற்றி வைத்து விட்டோம். பெருமாளுக்கு கொஞ்சம் துளசி இலை, மகாலட்சுமிக்கு கொஞ்சம் வாசம் நிறைந்த பூக்களை போட்டுவிட்டு, உங்களால் முடிந்த இரண்டு வாழைப்பழம் அல்லது இரண்டு கற்கண்டு நைவேத்தியம் வைத்து, பிறகு கொஞ்சம் உதிரி புஷ்பங்களை பெருமாளின் பாதத்தில் போட்டு, நீங்கள் சொல்ல வேண்டிய இரண்டு வரி மந்திரம் இருக்கிறது. அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

பெருமாளின் மந்திரம்

ஓம் அச்சுதாய நம !
ஓம் ஜனார்த்தனாய நம !

- Advertisement -

என்ற இந்த இரண்டு வரி மந்திரத்தை சொல்லி கோவிந்தா கோவிந்தா நாமத்தை எழுப்பி, பெருமாளுக்கு அர்ச்சனை செய்து தீப தூப கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொண்டாலே போதும். பெருமாளின் அருள் ஆசி உங்களுக்கு பெரிய அளவில் கிடைக்கும். கூடவே மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். செய்த பாவங்களுக்கான விமோசனம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நல்லது நடக்க பரிகாரம்

செய்த பாவத்திற்கு கொஞ்சம் மன்னிப்பும் பெருமாளிடம் கேட்டுக் கொள்ளுங்கள். மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்பவும் தவறு செய்யக்கூடாது. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாளைய தினம் இந்த எளிமையான வழிபாட்டை செய்து எளிமையான மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் நிச்சயம் தீரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by