பரிகாரங்கள் எளிமையாக இருந்தால், பரிகாரத்திற்கு பவர் இல்லை என்று சொல்கிறது இந்த உலகம். அப்படி கிடையாது. மிக மிக எளிமையான பரிகாரத்தில் தான் சக்தி வாய்ந்த நன்மைகள் அடங்கியிருக்கிறது. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போகும் பரிகாரம் மிக மிக எளிமையான பரிகாரம். இதை செய்தால் வாழ்க்கையில் முன்னேறி விட முடியுமா என்று நிறைய பேர் சிந்திக்கலாம். இதை மட்டும் செய்தாலே போதும். வாழ்க்கையில் நீங்கள் எங்கோ சென்று விடுவீர்கள்.
அதிலும் குறிப்பாக சில பேருக்கு ஜாதக கட்டத்தில் நல்லது நடக்க வாய்ப்பே இருக்காது. கட்டத்தை சுற்றி சுற்றி பார்த்து கணக்கு போட்டாலும், உன் வாழ்க்கை விளங்காது என்று தான் சொல்லுவார்கள். நேரடியாக ஜோதிடர்கள் இப்படி சொல்ல மாட்டார்கள். காலகட்டம் சூழ்நிலை இப்போது சரியில்லை என்று சொல்லுவார்கள்.
உங்களுடைய ஜாதக கட்டத்திலும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், இன்றிலிருந்து இந்த பரிகாரத்தை செய்ய துவங்கி பாருங்கள். பொதுவாக ஜோதிடத்தில் இன்னொரு விஷயமும் சொல்லப்பட்டுள்ளது. திங்கட்கிழமையும், வியாழக்கிழமை அன்றும் துவங்கக்கூடிய பரிகாரங்களில் தடைவராது என்று. வாய்ப்பு இருந்தால் திங்கட்கிழமை வியாழக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை நீங்கள் துவங்கலாம். மிகவும் நல்லது.
நல்லது நடக்க பரிகாரம்
தினமும் எழுந்து குளித்து முடித்துவிட்டு சிவசிவ என்று சொல்லி கொஞ்சம் திருநீரை நெற்றியில் பூசுங்கள். இது முதல் பரிகாரம். வெளியில் செல்லும்போது தினமும் ஒரு பசு மாட்டிற்கு உங்கள் கையால் அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் அல்லது பசு மாடு என்ன சாப்பிடும். உங்களுக்கு தெரியும் அல்லவா. பசு சாப்பிடும் படி இருக்கக்கூடிய எந்த பொருளை வேண்டும் என்றாலும் உங்கள் கையால் வாங்கி கொடுங்கள். இந்த பரிகாரத்தை ஒருநாள் செய்தால், இரண்டு நாள் செய்தால் பலன் நிச்சயம் இருக்காது.
தினமும் உங்கள் வாழ்க்கையில் இந்த 2 விஷயங்களையும் தொடர்ந்து செய்து வரும்போது, தானாக உங்களுடைய கால்கள் சிவன் கோவிலை தேடி செல்லும். தானாக உங்களுடைய கால்கள் முருகன் கோவிலை தேடி செல்லும். உங்களுடைய வாய் திருவாசகம் தேவாரம் பாடத் துவங்கும். உங்களுடைய வாய் திருப்புகழ் பாடத் தொடங்கும். அரோகரா சொல்லத் துவங்கும், ஓம் நமசிவாய சொல்ல துவங்கும். ஈசனின் காலையும், முருகனின் காலையும் பற்றி கொண்டவர்களுக்கு எதற்கு ஜாதகம். உங்களுடைய தலையெழுத்து நிச்சயம் மாறும்.
முருகனின் திருப்பாதம் உங்களுடைய தலை மேல் இருக்க, தாறுமாறான தலையெழுத்து அழிந்து, உங்களுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த பரிகாரத்தில் செய்வதற்கு ஏதேனும் சிரமம் இருக்கிறதா. நிச்சயம் கிடையவே கிடையாது. இந்த பரிகாரத்தை செய்ய துவங்கிய ஒரு சில நாட்களிலேயே மன நிம்மதி உங்களை வந்து சேர்ந்துவிடும்.
ஆனால் இந்த பரிகாரத்தை ஒரு வருடம், இரண்டு வருடம் செய்யும்போது தான் உங்களுடைய வாழ்க்கையில் நிலையான நல்ல மாற்றங்கள் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். குரு பகவான் ரொம்ப பெரிய கிரகம். சனிபகவான் ரொம்ப பெரிய கிரகம். இவர்கள் நினைத்தால் நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நல்லதாக நடக்கும்.
ஆனால் இவர்களுக்கு செய்யக்கூடிய பரிகாரம் ஒரே நாளில் பலன் தராது. குருவுக்கு 1 வருடம் பரிகாரம் செய்தால் தான் பலன் கிடைக்கும். சனிபகவானுக்கு 2 1/2 வருடம் பரிகாரம் செய்தால்தான் பலன்களைக்கும் என்பதும் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம். கிரகங்களுக்கு உரிய பரிகாரங்களை தேடித் தேடி நாம் செய்ய, நமக்கு நேரமும் இருக்காது, அதற்கான நிதி நிலைமையும் போதாது.
இதையும் படிக்கலாமே: சுக்ர தோஷத்தை நீக்கும் தானம்
மேலே சொன்ன பரிகாரத்தை செய்யுங்கள் தினமும் நெற்றியில் திருநீர் அணிந்து, சிவசிவ அரோகரா சொன்னாலே போதும். வேறு எதுவுமே வேண்டாம். பசு மாட்டிற்கு முடிந்தவரை உணவு பொருட்களை உங்கள் கையாலேயே கொண்டு போய், பசு வாயில் வைத்து விடுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும் ட்ரை பண்ணி பாருங்க.