
இன்றைய சூழலில் மனிதர்கள் பலருக்கும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள் பல ரூபங்களில் வந்து கொண்டே இருக்கிறது. சிலருக்கு பிரச்சனைகள் விரைவில் நிவர்த்தி ஆகும். சிலருக்கு அது நீண்டுகொண்டே போகும். இப்படி இருக்கையில் நம்முடைய பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து, நமக்கு தேவையான அளவு பண வசதி கிடைக்க, மருதாணி செடியை கொண்டு செய்ய கூடிய ஒரு மிக எளிய, ஆனால் சக்தி வாய்ந்த ஒரு அற்புதமான பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
பொதுவாக பலரும் தங்களது வீடுகளில் துளசி செடியை வளர்த்து அதற்கு பூஜை செய்வது வழக்கம். அதற்கு காரணம் துளசியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது தான். அதே போல தான் மருதாணி செடிக்கும் ஆன்மீக ரீதியாக சில சக்திகள் இருக்கின்றது. சுக்கிரனின் சிறப்பு மருதாணிக்கு உண்டு என்று கூறுகிறது ஜோதிடம்.
ஒரு வீட்டில் எந்த இடத்தில் மருதாணி செடி இருந்தால் அந்த வீட்டிற்கு அந்த செடி சுபிட்சத்தை அள்ளித்தரும் என்று ஆன்மீக ரீதியாக சில குறிப்புக்கள் உண்டு. அதாவது வீட்டின் தென்மேற்கு பக்கத்தின் மத்தியில் மருதாணி செடி வளர்ப்பதென்பது மிகவும் உசிதமான ஒரு இடம். இதுவரை மருதாணி செடியை வளர்க்காதவர்கள் கூட ஒரு சிறிய தொட்டியிலாவது இந்த செடியை இந்த இடத்தில் வைத்து வளர்த்து வந்தால் நல்லதொரு மாற்றும் நிச்சயம் இருக்கும்.
செவ்வாய், வெள்ளி கிழமைகளில் துளசி செடியை நாம் எவ்வாறு வணங்குவோமோ அதே போல மருதாணி செடியை பூஜித்து வணங்குவது நலம். குறிப்பாக நீண்ட நாட்கள் பண பிரச்சனைகளில் தவிப்பவர்கள் அதில் இருந்து விடுபட, தினம் தோறும் மருதாணி செடியை வணங்கி அதனிடம் உங்களில் பண பிரச்சனை தீர வழிவகை பிறக்க வேண்டும் என்று கூறி வாருங்கள். அதே போல செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மருதாணி செடிக்கு தீபம் ஏற்றி வழிபடுவது மேலும் சிறப்பு சேர்க்கும்.
மாதம் தோறும் வரும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மருதாணி செடியை வணங்குவதன் மூலம் நமது தீராத கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போகும். ஆண் தெய்வத்தை குலதெய்வமாக கொண்டவர்கள் அமாவாசையிலும், பெண் தெய்வத்தை குலதெய்வமாக கொண்டவர்கள் பௌர்ணமியிலும் மருதாணி செடியை வணங்கி அதன் வேரில் 6 சொட்டு தூய்மையான தேனை விடுவதன் மூலம் நமது கஸ்டங்கள் எல்லாம் கரைந்து போகும்.
வீட்டில் மருதாணி செடியை வளர்ப்பவர்கள் எக்காரணம் கொண்டு அதை காய விடக் கூடாது. அதற்க்கு தேவையான அளவு நீரை ஊற்றி எப்போதும் அதை சிறப்பாக கவனித்துக்கொள்வது மிக மிக அவசியம். அதே போல வீட்டில் சாம்பிராணி போடும் சமயத்தில் மருதாணி விதைகளை அதனோடு சேர்த்து போடுவதன் மூலம் நேர்மறை ஆற்றல்கள் வீடு முழுவதும் பரவி நமக்கான புதிய ஒரு நல்ல வழிகள் பிறக்க உதவிடும்.