
பண்டிகை, விசேஷம் வந்துவிட்டாலே பெண்களின் கையில் மருதாணியை பார்க்க முடியும். மருதாணி வைத்துக் கொள்வது என்றால் பெண்களுக்கு ரொம்பவே இஷ்டமான ஒரு விஷயம் இந்த மருதாணி வைத்துக் கொள்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? இது அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் என்னென்ன பலன்களை கொடுக்கும்? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
மருதாணி உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு அற்புதமான மூலிகை செடியாக இருக்கிறது. மருதாணி செடிக்கு அருகில் தூங்கி பாருங்கள், அப்படி ஒரு தூக்கம் வரும். மருதாணி பூக்களை தலையணையாக செய்து வைத்து படுத்தால் தூக்கமின்மை பிரச்சனை அடியோடு தீரும், நல்ல தூக்கமும், நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் வரும். உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் ஆகிய இடங்களில் எல்லா நரம்புகளுக்கும் ஒரு கனெக்ஷன் உள்ளது. இந்த இடத்தில் மருதாணி வைப்பதால் உடல் உஷ்ணம் தணிந்து, குளிர்ச்சியுறும், இதனால் பல விதமான வியாதிகள் நம்மை அணுகாது. சருமத்திற்கு கவசம் போல செயல்படும் இந்த மருதாணி இலைகளை அரைத்து வைப்பதால் சரும நோய்களும் அண்டாது.
மருதாணி வைத்தால் ஆறு நாட்களுக்கு அது அழியாது என்பார்கள். இந்த ஆறு நாட்களும் மரணம் நமக்கு வராது என்று முன்னோர்கள் நம்பியுள்ளனர். மருதாணி வைப்பவர்கள் கையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் காலனும் நம்மை பார்த்து அஞ்சுவாராம். மருதாணி வைக்கும் கைகளில் நீங்கள் ஒரு விஷயத்தை செய்தால், அது நேர்மறையான பலன்களை மட்டுமே கொடுக்கும். ஒருவருக்கு பணம் கொடுத்தாலும் சரி, ஒருவருக்கு உதவி செய்தாலும் சரி, அது உங்களுக்கு நேர்மறையான பலன்களை கொடுக்கும்.
காலையில் எழுந்ததும் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு குளித்து வேலைக்கு கிளம்பும் முன்னர் கையில் மருதாணியுடன் இருக்கக்கூடிய மனைவியின் கைகளால் சாவி அல்லது நாணயத்தை வாங்கிக் கொண்டு செல்லுங்கள். தொழில் புரிபவர்கள் கடை சாவி வாங்கி செல்லலாம், வேலை செய்பவர்கள் நாணயங்களை வாங்கிச் செல்லலாம். இப்படி செய்யும் பொழுது பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நீங்கள் மென்மேலும் முன்னேறுவீர்கள் என்பது நம்பிக்கை.
விசேஷ காலங்களில் பெண்கள் மருதாணி வைக்கும் பொழுது யாருடைய கைகளில் செக்க செவேல் என சிவந்து போகிறதோ, அவர்கள் மேல் அவர்களுடைய கணவர் ரொம்பவே பாசமாக இருப்பார் என்று சொல்லுவார்கள். மருதாணி நன்கு சிவந்தால் அவர்கள் ரொம்பவே ராசியானவர்கள். தெய்வீக சிந்தனை இவர்களிடம் அதிகம் இருக்கும். விசேஷ காலங்களில் ஏற்படக்கூடிய படபடப்பு, டென்ஷன் போன்றவற்றை இது குறைக்கும். மாதவிடாய் காலங்களில் பெண்கள் கண்டிப்பாக மருதாணி வைத்துக் கொள்ளலாம். இதனால் வயிற்று வலி, வயிற்று உபாதைகள் குறையும். தலைக்கும் விரல்களின் நுனிக்கும் சம்பந்தம் உண்டு, எனவே நீங்கள் விரல் நுனிகளில் மருதாணி இட்டுக் கொள்வதால் ஒற்றை தலைவலி, தலைபாரம் ஆகியவை குறையும். மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய மூட் ஸ்விங், எரிச்சல், பதற்றம் போன்றவை மட்டுப்படும்.
இதையும் படிக்கலாமே:
16-10-2024 ஷரத் பூர்ணிமா வழிபாடு
இளநரை வராமல் இருக்கவும், முடி நன்கு செழித்து வளரவும் மருதாணி இலைகளை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காய வைத்து, பின்னர் அதை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி எடுத்து, தலைக்கு பயன்படுத்துவார்கள். இது இயற்கையான ஹேர் பேக் என்றும் வைத்துக் கொள்ளலாம். இவ்வளவு பலன்களை அள்ளித் தரக்கூடிய மருதாணியை வாரம் ஒரு முறையாவது கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் மருதாணி வைக்க, அவர்களுக்கு கைராசி ஏற்படும், தொழில் வளர்ச்சி உண்டாகும், நேர்மறையான சிந்தனைகள் பெருகும், மனம் ஒருமுகப்படும், சஞ்சலம் தீரும்.