ஆயுத பூஜை, விஜயதசமி முடிந்து வரக்கூடிய இந்த புரட்டாசி மாத பௌர்ணமி திதியை தான் ஷரத்பூர்ணிமா என்று சொல்லுகிறார்கள். பெரும்பாலும் இந்த வழிபாடு நம்முடைய நாட்டில் கிடையாது. வடமாநிலத்தவர்கள் இந்த நாளை ரொம்பவும் விசேஷமாக கொண்டாடுகிறார்கள். அதாவது பெருமாளுக்காக ஏகாதேசி திதியில் கண்விழித்து வழிபாடு செய்கின்றோம்.
ஈசனுக்காக சிவராத்திரி அன்று கண் விழித்து வழிபாடு செய்கின்றோம். அதேபோல மகாலட்சுமியின் அருளாசியை பெற வேண்டும் என்பதற்காக கண்விழித்து வழிபாடு செய்யக்கூடிய ராத்திரிதான் இந்த ஷரத் பூர்ணிமா வழிபாடு. பௌர்ணமியை தான் பூர்ணிமா என்று சொல்கிறார்கள். இந்த ஷரத் பௌர்ணமி எந்த நாளில் வருகிறது. எந்த நேரத்தில் வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
ஷரத் பூர்ணிமா வழிபாடு
புதன்கிழமை, அக்டோபர் 16, 2024 ஷரத் பௌர்ணமி வரவிருக்கிறது.
பௌர்ணமி திதி ஆரம்பம்: அக்டோபர் 16, 2024 அன்று இரவு 08:40
பௌர்ணமி திதி முடிவு: அக்டோபர் 17, 2024 அன்று மாலை 04:55
காலண்டரில் 17 ஆம் தேதி வியாழக்கிழமை தான் பௌர்ணமி திதியானது போடப்பட்டுள்ளது. ஆனால் 16ஆம் தேதி புதன்கிழமை இரவே இந்த பௌர்ணமி திதி பிறந்து விடுவதால், அக்டோபர் 16 புதன்கிழமை இரவு 9 மணிக்கு மேல் நம்முடைய வீட்டில் இந்த மகாலட்சுமி பூஜையை துவங்கலாம். நாளை இரவு 9:00 மணிக்கு மேலாக உங்கள் வீட்டு பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
முடிந்தால் ஒரே ஒரு தாமரை பூவை வாங்கி மகாலட்சுமி தாயாருக்கு முன்பு வைத்து விடுங்கள். மகாலட்சுமிக்கு ஒரு விளக்கு ஏற்றி, ஒரு பிரசாதம் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிரசாதம் உங்கள் இஷ்டம். சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் எது வேண்டும் என்றாலும் வைக்கலாம். இதெல்லாம் தயார் செய்ய இரவு நேரம் இல்லை என்பவர்கள் 1 டம்ளர் காய்ச்சிய பாலில் நாட்டு சர்க்கரை போட்டு கலந்து வைத்து விடுங்கள்.
இந்த நாளில் மாதுளம் பழம் நெய்வேதியம் வைப்பது ரொம்ப சிறப்பு. உங்களால் முடிந்தால் மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து கிண்ணத்தில் போட்டு மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு மகாலட்சுமியின் முன்பு அமர்ந்து மகாலட்சுமிக்கு உகந்த லக்ஷ்மி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமி போற்றிகள் போன்ற பாடல்களை படிக்கலாம்.
எதுவுமே தெரியவில்லை என்றால் ‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி புதன்கிழமை இரவு முழுவதும் கண்விழித்து மகாலட்சுமி தாயாரை நீங்கள் வழிபாடு செய்து விட்டால், உங்களுடைய வறுமை அன்றோடு உங்களை விட்டு முழுமையாக நீங்கிவிடும். சில பேருக்கெல்லாம் ஜாதக கட்டில் மோசமான சூழ்நிலை இருக்கும். லட்ச லட்சமாக பணம் வைத்திருந்து, மொத்தத்தையும் இழந்து இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் நாளைய தினம் இரவு முழுவதும் மகாலட்சுமியே நினைத்து கண் விழித்தால் நிச்சயம் அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும்.
ஏனென்றால் மகாலட்சுமி தாயார் நாளை இரவு முழுவதும் ‘கோ ஜாக்கிரதை’ என்ற வார்த்தையை உச்சரித்துக் கொண்டு எல்லோர் வீட்டிற்கும் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. கோ ஜாக்கிரதை என்றால் ‘யார் விழித்திரார்கள்’ என்பது அர்த்தம்.
யாரெல்லாம் நாளைய தினம் கண் விழித்திருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் மகாலட்சுமி தனது ஆசிகளை வழங்கி செல்வார் என்பது தான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய நம்பிக்கை. வடமாநிலத்தவர்கள் இந்த நாளை மிகவும் விமர்சியாக கொண்டாடுகிறார்கள். நாமும் இந்த வருடம் மகாலட்சுமி தேவிக்காக இந்த வழிபாட்டை மேற்கொள்வோம். நிச்சயம் நமக்கும் அவளின் அருள் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.
சரி எங்களால் புதன்கிழமை இரவு முழுவதும் கண்விழிக்க முடியாது. அடுத்த நாள் வேலை இருக்கிறது என்ன செய்வது. இரவு 12 மணி வரைக்கும் கண் விழித்து உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். ஆனால் மகாலட்சுமி தாயாரின் முன்பு, அன்று இரவு முழுவதும் விளக்கு ஏறியட்டும். விளக்கில் கொஞ்சம் நிரம்ப எண்ணெயை ஊற்றிவிட்டு உறங்கச் செல்லுங்கள்.
மறுநாள் காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு மீண்டும் மகாலட்சுமி தாயார் முன்பு நின்று ஒரு பிரார்த்தனையை வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். இவ்வளவுதான் வழிபாடு. ஆனால் பொருளாதாரத்தில் மிகவும் நொடிந்து போனவர்கள், எங்களால் தலை தூக்கவே முடியாது, நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை என்ன, இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை என்ன, நாங்கள் வாழ்க்கையில், மேல் உயரத்தில் இருந்து, அடி தட்டுக்கு போய் விட்டோம்.
இதையும் படிக்கலாமே: குலதெய்வ கட்டு அவிழ பரிகாரம்
காரணம் எங்களுடைய கெட்ட நேரம் என்பவர்கள் எல்லாம் சிரமம் பார்க்காமல் நாளை ஒருநாள் கண் விழித்து விடுங்கள். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நாளையுடன் தொலைந்து விடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.