- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இன்று மாசி மகம் – நீங்கள் இவற்றை செய்தால் பலன்கள் அதிகம்

நமது தமிழ் மாத வரிசை படி ஒவ்வொரு மாதமும் வானில் இருக்கும் சந்திரன் 27 நட்சத்திரங்களில் பிரவேசிக்கும் தினங்களின் சுழற்சியே ஒரு மாதம் என கருதப்படுகிறது. இந்த நட்சத்திரங்களில் அனைத்தும் சிறப்பு தன்மை கொண்டவை என்றாலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தில் ஒவ்வொரு நட்சத்திர தினம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் மாசி மாதம் வரும் மாசி மகம் நட்சத்திரம் ஆன்மீக சிறப்பு மிகுந்த ஒரு தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாம் செய்ய வேண்டியது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. மகம் நட்சத்திரம் நவகிரகங்களில் ஞானகாரகன் என அழைக்கப்படும் கேது பகவானுக்குரிய நட்சத்திரம் ஆகும். எனவே மாசி மகம் தினத்தன்று இறைவழிபாடு, விரதம் மேற்கொள்பவர்களுக்கு இகலோக சுகங்கள் அனைத்தும் கிடைப்பதோடு, ஞானம் மற்றும் மோட்சம் அடைந்து மீண்டும் பிறவாமை பாக்கியத்தை அருள்கிறார் கேது பகவான். அதுவும் மாசி மகம் தினம் பௌர்ணமி தினத்தில் வருவது சந்திரன் மற்றும் கேது பகவான் ஆகிய இருவரின் அருளாசிகளையும் நமக்கு தருகிறது.

- Advertisement -

மாசி மகம் தினத்தில் தான் தட்சனின் மகள் தாட்சாயிணியாக பராசக்தி அவதரித்தாள். மாசி மகம் அன்று தான் முருகப்பெருமான் தனது தந்தைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை கடலில் இருந்து வெளிக்கொணர்ந்தது மாசி மகம் தினம் ஆகும். எனவே இந்த நாளில் சிவ, வைணவ கோயில்களில் தீர்த்தவாரி நடைபெறும். மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மாசி மகம் தினத்தன்று “மகாமகம்” விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மாசி மகம் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விடுவது நல்லது. இந்த தினத்தில் புண்ணிய நதிகள், கடல் போன்றவற்றில் நீராடுவதால் உங்களின் தோஷங்கள் நீங்குகிறது. இத்தினத்தில் புண்ணிய தீர்த்த தலங்களில் மறைந்த தங்களின் முன்னோர்கள் போன்றவர்களுக்கு தர்ப்பணம், சிராத்தம் போன்றவற்றை செய்வதால் பித்ரு தோஷங்கள் நீங்குகிறது. காலையில் கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் மாலையில் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

- Advertisement -

மாசி மகம் தினத்தில் காலையிலிருந்து உணவு ஏதும் சாப்பிடாமல் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று அங்குள்ள தெய்வத்தை உளமார வழிபட்டு, கோயில் விழாக்களில் பங்கு கொண்டு உங்களால் முடிந்த சேவைகளை செய்வதால் நீங்கள் செய்த பாவங்கள் நீங்கும். இத்தினத்தில் உங்கள் சக்திக்கு ஏற்ப அன்னதானம், ஆடை தானம் போன்றவற்றை செய்வதால் உங்கள் குடும்பத்தை பீடித்திருக்கும் தோஷங்கள், குலசாபங்கள் நீங்கும். உங்கள் பரம்பரையில் இருப்பவர்களுக்கு கல்விதடை, திருமண தாமதம், குழந்தையின்மை போன்றவை நீங்கி சீரும், சிறப்புமாக வாழும் யோகம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
ராகவேந்திரர் விரதம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Masi magam in Tamil. It is also called as Masi magam thiruvila in Tamil or Masi magam viratham in Tamil or Masi magam festival in Tamil or Masi magam valipadu in Tamil.

- Advertisement -