
ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக மாசி மாதம் என்பது விஷ்ணு புண்ணிய காலம் என்று கூறப்படக்கூடியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட மாசி மாதத்தின் முதல் நாள் என்பது வியாழக்கிழமை பிறந்திருக்கிறது. வியாழக்கிழமை என்பது குருபகவானுக்கு எந்த அளவிற்கு உகந்த நாளோ அதே போல் தான் குபேர பகவானுக்கும் உகந்த நாளாக திகழ்கிறது. பணத்தை அதிக அளவில் பெறுவதற்கு இவர்கள் இருவரின் அருளும் பரிபூரணமாக வேண்டும். அந்த வகையில் மாசி மாதம் முழுவதும் பணவரவை ஏற்படுத்துவதற்குரிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செல்வத்திற்கு காவலாக திகழக்கூடியவர் குபேர பகவான் என்று நம் அனைவருக்குமே தெரியும். குபேர பகவானை வியாழக்கிழமை மாலை நேரத்தில் வழிபாடு செய்வதன் மூலம் குபேரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குபேரருக்குரிய வியாழக்கிழமை அன்று மாசி மாதம் பிறப்பதால் அந்த மாதம் முழுவதும் பணவரவு அதிகரிப்பதற்கு குபேர வசிய மந்திரத்தை நாம் தினமும் உச்சரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து நண்பகல் 12 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். நடுவில் ராகு காலம், எமகண்டம் இருக்கும் பட்சத்தில் அதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை காலையில் கூற இயலவில்லை என்றால் மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். தினமும் இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை கூறும் பொழுது அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது என்பது முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு வேண்டுமானாலும் அசைவம் சாப்பிடலாம்.
ஆண்களும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். பெண்களும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மூன்று நாட்களை இதில் நாம் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. எந்த தீட்டாக இருந்தாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற கணக்கு கிடையாது. அப்படி நாம் கணக்கில் வைத்துக் கொண்டோம் என்றால் மந்திரத்தின் மீது நம்முடைய கவனம் தவறிவிடும் என்பதால் குறைந்தபட்சம் ஐந்து நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 10 நிமிடம் வரை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
நம்முடைய கைபேசியில் 5 நிமிடத்திற்கு அலாரம் வைத்து விட்டு இந்த மந்திரத்தை நிறுத்தி நிதானத்தோடு நாம் இருக்கக்கூடிய எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் இருந்து கொண்டே கூறலாம். முடிந்த அளவிற்கு வீட்டில் பூஜை அறையில் அமர்ந்து தீபத்தை பார்த்தவாறு கூறுவது இன்னும் அதீத பலனை தரும் என்று கூறப்படுகிறது.
“ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை குபேராய ஸ்ரீம் ஓம் நமஹ”
இதையும் படிக்கலாமே:பணம் சேர்க்கும் பொருட்கள்
எளிமையான இந்த ஒரு வரி குபேர வசிய மந்திரத்தை மாசி மாதம் முழுவதும் தொடர்ச்சியாக நாம் உச்சரிப்பதன் மூலம் குபேரரின் அருளால் பணவரவு அதிகரிக்கும். பணத்தை சம்பாதிப்பதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகளும் வெற்றி அடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.