- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் சேர்க்கும் பொருட்கள்

பணம் சேர்க்கும் பொருட்கள்

- Advertisement -

பணத்தடை என்பது எல்லோருக்கும் இருப்பது தான். ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்திற்கு பணம் தேவைப்படும் பொழுது, நம்மிடம் பற்றாக்குறையாக இருக்கும். பணம் என்பது எப்பொழுதும் நிலையானது கிடையாது. அது பல பேரிடம் சென்று மாறி வரக் கூடியது. எனவே இந்த பணம் தடை இல்லாமல் வருவதற்கு, பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நிலையானதாக இல்லாத இந்த பணம் தேவைப்படும் பொழுது நம்மிடம் நிலையாக இருப்பதற்கு, பூஜை அறையில் பணத்தை ஈர்க்க கூடிய இந்த பொருட்களை எல்லாம் நாம் வைத்திருக்கிறோமா? என்று பார்ப்போம். பூஜை அறை எப்பொழுதும் மங்களகரமாகவும், மணம் கமலும் படியும் இருக்க வேண்டும். தெய்வீக வாசம் வீசினால் தான், அங்கு நமக்கு தெய்வ அருளும் கிடைக்கும்.

- Advertisement -

பூஜை அறையை வாரம் ஒருமுறை உங்களால் சுத்தம் செய்ய முடியும் என்றால், நீங்கள் உங்கள் விருப்பம் போல நிறைய படங்களை அடுக்கி வையுங்கள். இல்லை எனக்கு வேலை நிறைய இருக்கிறது என்பவர்கள், தேவையான படங்களை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். சுவாமி படங்களை தூசு படாமல் வைத்துக் கொள்ள வேண்டும். உடைந்த கண்ணாடி பொருட்களை பூஜை அறையில் வைக்க கூடாது. இவை பணத்தை சேர விடாது, தடைகளை ஏற்படுத்தும்.

பூஜை அறையில் மணம் கமலும் படியான சந்தனம், குங்குமம், பன்னீர், ஜவ்வாது போன்ற விஷயங்களை எல்லாம் வைத்திருக்க வேண்டும். சந்தனம், குங்கும பொட்டு வைக்கும் பொழுது சந்தனத்துடன் பன்னீர் சேர்த்து வையுங்கள், ஜவ்வாது கூட சேர்க்கலாம். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பணத்தை ஈர்க்கக் கூடிய இந்த பொருட்களை எல்லாம் போட்டு வையுங்கள். இதனால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணம் தங்கு தடை இல்லாமல் வந்து சேரும்.

- Advertisement -

அன்றாடம் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அவசர தேவைக்கு கூட பணம் இல்லை என்று புலம்புபவர்கள் இதை செய்தால் நிச்சயம் பண பற்றாக்குறை தீரும். கண்ணாடி பவுலில் நான்கைந்து ஏலக்காய்கள் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் நான்கு கிராம்புகள் போடுங்கள். ஒரு சுருள்பட்டை, ஒரு துண்டு பச்சை கற்பூரம், ஜாதிபத்திரி சிறிதளவு சேர்த்து இதை அப்படியே பூஜை அறையில் வைக்க வேண்டும்.

இந்த கண்ணாடி பௌலில் பணம் ஈர்க்கும் பொருட்களுடன், கொஞ்சம் சில்லறை நாணயங்களையும் போட்டு வாருங்கள். தினமும் பூஜை செய்யும் பொழுது கையில் அட்சதையுடன், கொஞ்சம் நாணயத்தையும் வைத்து பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை முடிந்த பின்பு அட்சதையுடன் சேர்த்து நாணயத்தையும் அந்த பவுலில் போடுங்கள். அட்சதை தயாரிக்க முடியாதவர்கள், கொஞ்சம் உதிரிப்பூக்களை கையில் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
கோதுமை அடை தோசை ரெசிபி

கோவிலில் சாமி கும்பிடுவது போல இரு கை கூப்பி வீட்டில் சுவாமியை கும்பிட்ட பிறகு, பிரார்த்தனை வைக்கும் பொழுது இடது கை விட்டத்தை பார்த்து நெஞ்சுக்கு நேராக வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கையில் அட்சதை அல்லது உதிரி பூக்களுடன் நாணயங்களையும் வைத்து வலது கையை மேலே வைத்து மூடுங்கள். பின்பு மனதார பிரார்த்தித்துக் கொண்டு, கையில் இருப்பதை பவுலில் போட வேண்டும். வீட்டில் வேல், திரிசூலம் போன்ற ஏதாவது ஒரு தெய்வீக ஆயுதமும் பூஜை அறையில் இருக்க வேண்டும். இப்படி உங்கள் பூஜை அறையில் இருந்தால் பண பற்றாக்குறை வராது. அவசர காலத்தில் பண தேவைக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை, இறைவனுடைய அருள் முழுமையாக கிடைக்கும்.

சற்று முன்