- Advertisement -
வீட்டு குறிப்புகள்

ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல், மிக்ஸியை இப்படி துடைத்து பராமரித்து வந்தால், பல வருடங்களுக்கு உங்க மிக்ஸி பழுதடையாது பாத்துக்கோங்க.

- Advertisement -

தினமும் சட்னி அரைப்பது, மசாலா பொருட்கள் அரைப்பது, இப்படி அந்த மிக்ஸி ஓயாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி ஓயாமல் வேலை செய்கிறார்களோ, அதே போலத்தான் இந்த மிக்ஸியும் தினமும் நமக்காக உழைத்து அரைத்துக் கொடுக்கின்றது. அப்பேற்பட்ட மிக்ஸியின் அருமை பெருமை நமக்கு தெரிவது கிடையாது. ஒருநாள் வீட்டில் மிக்ஸி ரிப்பேர் ஆகட்டும். அப்போதுதான் அந்த மிக்ஸியின் அருமை நமக்கு தெரியும். அப்பேர்ப்பட்ட மிக்ஸியை நாம் எப்படி பராமரிக்க வேண்டும்.

அரைத்த சட்னி, அரைத்த அறவையெல்லாம் மேலே ஒழுகி அந்த மிக்ஸியை தொடுவதற்கே பிடிக்காது. அந்த அளவிற்கு சமையல் அறையில் வைத்திருப்போம். நமக்கு உதவும் அந்த மிக்ஸியை சுத்தம் செய்வது வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் கடமை அல்லவா. சரி, அதற்காக மிக்ஸியை தண்ணீர் போட்டு துடைத்துக் கொண்டே இருந்தால் மிக்ஸி சீக்கிரம் பழுதடைந்து போகும். ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் மிக்ஸியை துடைத்து சுத்தமாக பராமரிக்க ஏதாவது ஐடியா இருக்கா. நிச்சயமா இருக்குதுங்க. வாங்க அந்த பயனுள்ள வீட்டு குறிப்பு என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் மிக்ஸியை சுத்தம் செய்யும் முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/4 ஸ்பூன் அளவு பல் தேய்க்கும் பேஸ்ட், 1 சின்ன மூடி அளவு வினிகர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். பேஸ்ட் கரைவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். உங்கள் கையை கொண்டு இந்த லிக்விடை நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். வெள்ளை நிறத்தில் கிளீனிங் சொல்யூஷன் உங்களுக்கு கிடைத்திருக்கும்.

இந்த சொல்யூஷனை வைத்து தான் மிக்ஸியை சுத்தம் செய்யப் போகின்றோம். ஒரு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் எடுத்து, இந்த லிக்விடில் நனைத்து, மிக்ஸி முழுவதும் தேய்த்து, அப்படியே ஐந்து நிமிடம் விட்டுவிடுங்கள். மீண்டும். அந்த காட்டன் துணியை, இந்த லிக்விடில் நனைத்து மிக்ஸியை தேய்த்து துடைத்தால், மிக்ஸி பளிச் பளிச்சென மாறிவிடும். மிக்ஸியின் ஒயரை மறந்துடாதீங்க. அதையும் இந்த லிக்விடை வைத்து தேய்த்து துடைத்து விடுங்கள். இறுதியாக காய்ந்த காட்டன் துணியை வைத்து மிக்ஸி முழுவதும் துடைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

மிக்ஸி ஜார் மாட்டக்கூடிய அந்த மேல் பகுதி இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் கை போகாது. ஆனால், அதன் உள்ளேவும் நிறைய அழுக்கு இருக்கும். அந்த இடத்திற்கு உள்ளே நீங்கள் தயார் செய்த லிக்விடை ஸ்பிரே செய்து விட்டு விடுங்கள். ஒரு ஸ்பூனில் லிக்விடை எடுத்து அந்த வாஷரை சுற்றி ஊற்றி விட்டாலும் சரிதான். ஒரு இரண்டு நிமிடம் அப்படியே அது ஊறட்டும். ஒரு காது குடையும் பட்ஸ் இருந்தால், அந்த இடுக்குகளில் எல்லாம் விட்டு சுத்தம் செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு சிறிய கம்பி எடுத்து, அதில் காட்டன் துணியை சுற்றி ரப்பர் பேண்ட் போட்டு அந்த இடுக்குகளில் எல்லாம் விட்டு சுத்தம் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த விஷயம் மட்டும் தெரிந்தால், குப்பையில் கிடக்கும் தேங்காய் நாரை கூட விட்டு வைக்க மாட்டீங்க. எடுத்து வந்து பத்திரமா யூஸ் பண்ணுவீங்க.

வளைந்து கொடுக்கும்படியான கம்பியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு தலையில் குத்தும் ஹேர்பின் இருந்தால் கூட அதை நீக்கிவிட்டு நீளமாக வைத்து, அந்த ஹேர் பின்னில் துணியை சுற்றி இந்த மிக்ஸியின் மேல் பாகத்தை சுத்தம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மாதத்தில் ஒருமுறை மிக்ஸியை இப்படி துடைத்து பராமரித்தாலே போதும். மிக்ஸி பார்ப்பதற்கு பளிச்சென அழகாக இருக்கும். நமக்கு உதவி செய்யும் மிக்ஸியை சுத்தமாக வைத்துக் கொள்வது நம்முடைய கடமைதானே. ஆக இந்த பயனுள்ள வீட்டு குறிப்பை பின்பற்றி பாருங்கள். பிடித்திருந்தால் இதே போல மிக்ஸியை மெயின்டைன் பண்ணிக்கோங்க.

- Advertisement -