இந்த விஷயம் மட்டும் தெரிந்தால், குப்பையில் கிடக்கும் தேங்காய் நாரை கூட விட்டு வைக்க மாட்டீங்க. எடுத்து வந்து பத்திரமா யூஸ் பண்ணுவீங்க.

thengai-naar1
- Advertisement -

குப்பையில் தூக்கிப் போடும் இந்த தேங்காய் நாரை வைத்து பல வகையான உபயோகமான குறிப்புகளை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த குறிப்புகளில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, உங்களுக்கு எப்போது எது தேவைப்படுகிறதோ அதை நீங்கள் பின்பற்றி பலன் பெறலாம். குப்பையில் தூக்கிப் போடும் தேங்காய் நாருக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்குதா. அப்படின்னு யோசிக்கும் அளவுக்கு பயனுள்ள எளிமையான வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

தேங்காய் நாரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
முதலில் சேகரித்த தேங்காய் நாருகளை எல்லாம் உதிர்க்க வேண்டும். தனித்தனியாக தேங்காய் நார்களை உதிர்த்து எடுக்கும் போது, அதிலிருந்து துகள்கள் கீழே விழும் அல்லவா. அதைக்கூட தூக்கி குப்பையில் போடாதீங்க. அந்த தேங்காய் நார் துகள்களை, தூசிகளை சேகரித்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். அதை என்ன செய்வது என்று இந்த பதிவில் இறுதியில் பார்க்க போகின்றோம். அது ஒரு முக்கியமான டிப்ஸ்.

- Advertisement -

சரி இப்போது தேங்காய் நாரிலிருந்து உதிர்த்து தூசுகளை நீக்கிட்டீங்க. தேங்காய் நாரை ஒரு அகலமான மண்சட்டி அல்லது இரும்பு பாத்திரம் எதில் வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளவும், அதில் நெருப்பு மூட்டி விடுங்கள். தேங்காய் நார் முழுவதும் எரிந்து சாம்பல் ஆகிவிடும். கருப்பு நிறத்தில் மிகக் குறைந்த அளவு சாம்பல் உங்களுக்கு கிடைத்திருக்கும். அந்த சாம்பலை ஒரு ஈரம் இல்லாத கண்டைனரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும். இதை தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த சாம்பலை தேவையான அளவு ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு, கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் ஊற்றி, குழைத்தால் கருப்பு மை நமக்கு கிடைத்துவிடும். சின்ன சின்ன குழந்தைகள் நம்முடைய வீட்டில் இருந்தால் அவர்களுக்கு நெற்றியில் பொட்டு வைக்க, உள்ளங்கை, உள்ளங் கால்களில் பொட்டு வைக்க இந்த மையை பயன்படுத்தலாம். இந்த மையை வைத்தால், இதை துடைத்து எடுப்பதிலும் எந்த சிரமமும் இருக்காது. கெமிக்கல் கலக்காத சுத்தமான மை.

- Advertisement -

இதே மையை ஹேர் டை ஆகவும் பயன்படுத்தலாம். திடீரென்று வெளியே ஒரு விசேஷத்திற்கு செல்ல வேண்டும். தலைமுடிக்கு ஹேர் டை அடிக்க நேரமில்லை. தலைக்கு குளித்துவிட்டு லேசாக ஈரம் இருக்கும் போது, நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மையை, (தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்திருக்கும் மையை) வெள்ளை முடி இருக்க கூடிய இடத்தில் பூசி விட்டால் போதும். முடிகள் அனைத்தும் கருப்பு நிறமாக மாறிவிடும். உடனடி டையாக இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதை பாத்திரம் தேய்க்க பயன்படுத்தலாம். ஆனால் இப்போது பாத்திரம் தேய்க்க இதை பயன்படுத்தினால் இந்த தூசு சிங்கிள் போய் அடைத்துக் கொள்ளும் என்ற கவலை உள்ளது. எடுத்து வைத்திருக்கும் இந்த தேங்காய் நாரை வட்ட வடிவமாக சுருட்டிக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்டன் துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். அப்படியே ஸ்பாஞ்சனார் போல உங்களுக்கு கிடைத்துவிடும். இப்போது இதை பாத்திரம் தேய்க்க சிங்கக்குழுவ, வாஷ்பேஷன் கழுவ பயன்படுத்திக் கொள்ளலாம். துணியில் கட்டி வைத்திருக்கும்  தேங்காய் நார் வெளியே வராது.

இதையும் படிக்கலாமே: பத்து பேர் துணியைக் கூட பத்தே நிமிஷத்துல சுலபமா துவைக்க ஒரு சூப்பர் ஐடியா. இதுக்கு வாஷிங் மெஷின் தான் இருக்கணும்னு அவசியம் கூட இல்ல. வாங்க அந்த ட்ரிக்ஸ் என்னவென்று பார்ப்போம்.

சரிங்க, தேங்காய் நாரில் இருந்து முதலில் உதிர்த்து வைத்தோமே அந்த துகள்களை என்ன செய்வது. இப்போது வெயில் காலம். செடியில் என்னதான் தண்ணீர் ஊற்றினாலும் மண் உறிஞ்சிக் கொள்ளும். மண் காய்ந்து விடும். செடிகள் வாடும். தொட்டிக்கு மேலே, அந்த மண்ணில், செடிகளை சுற்றி இந்த தேங்காய் நார் துகள்களை தூவி விடுங்கள். அதன் பிறகு தண்ணீரை ஊற்றினால் ஈரப்பதம் நீண்ட நேரம் செடிகளில் தங்கும். மண் சீக்கிரம் காய்ந்து போகாமல் ஈரப்பதத்தோடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையான இந்த பயனுள்ள வீட்டு குறிப்புகள் உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -