
எவ்வளவு முயற்சி செய்தும் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை அதனால் நம்மால் பணத்தை சம்பாதிக்க இயலவில்லை என்று வருத்தப்படுபவர்கள் பலர் இருப்பார்கள். ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது என்று கூறி கூட கேள்விப்பட்டு இருப்போம். பணவரவை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்துமே தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறது என்று வருத்தப்படுபவர்களும் தங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பணம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்களும் கடுகு டப்பாவில் இந்த ஒரு பொருளை மறைத்து வைத்தால் போதும். பணம் நாலா பக்கமும் வந்து சேர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணத்தை சம்பாதிக்க வேண்டும் அதுவும் அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் எளிதில் சம்பாதிக்க வேண்டும் என்று பலரும் குறுக்கு வழியில் செல்கிறார்கள். இன்னும் சிலரோ நியாயமான வழியில் நம்முடைய உழைப்பிற்கு ஏற்ற பணம் நம்மிடம் வந்தால் போதும் என்று கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய உழைப்புக்கேற்ற பணத்தை பெறுவதற்காகவும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அந்த முன்னேற்றத்தின் வழியாக பணவரவை அதிகரிப்பதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான சூட்சுமமான பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த பரிகாரத்தை யாரிடமும் கூறக்கூடாது. இந்த பரிகாரம் செய்வதை யாரும் பார்க்கக்கூடாது. யாருக்கும் தெரியாமல் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் தான் தொடங்க வேண்டும். அதுவும் தொடங்கும் அன்றைய நாள் அஷ்டமி, நவமி, கரிநாள் போன்ற நாட்களாக இருக்கக் கூடாது. மேலும் இந்த பரிகாரத்தை தொடங்கும் நாள் அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் தான் செய்ய வேண்டும்.
இதற்கு நமக்கு தேவைப்படுவது கடுகு. ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைய கடுகு போட வேண்டும். பிறகு அந்த கடுகுக்குள் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை யாருக்கும் தெரியாத அளவிற்கு மறைத்து வைத்து விடுங்கள். ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ஐந்து ரூபாய் நாணயத்தை அதற்குள் மறைத்து வைத்துக் கொண்டே வரவேண்டும். ஒரு மாதம் நிறைவடைந்த பிறகு அதில் 40 ரூபாய் இருக்கும். அந்த 40 ரூபாயை எடுத்து பிறருக்கு தானதர்மம் செய்ய வேண்டும். அப்படி தான தர்மம் செய்யக்கூடிய நாள் கண்டிப்பாக முறையில் செவ்வாய் மற்றும் வெள்ளியாக இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ஐந்து ரூபாய் நாணயத்தை ஒழித்து வைத்து ஒரு மாதம் கழித்து அதை தானமாக தருவதன் மூலம் நாம் தானமாக தந்ததை விட பல மடங்கு அதிகளவிற்கு பண வரவு உண்டாகும் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் கடுகு நன்மையை நமக்கு ஈர்த்து தரும் என்றும் அதில் வைக்கக்கூடிய நாணயத்தால் நாம் செய்யக்கூடிய தானம் நமக்கு அதிக அளவில் பலனை தரும் என்பதும் தான். மூன்று மாதத்திற்கு ஒருமுறை டப்பாவில் இருக்கக்கூடிய கடுகை ஓடுகின்ற தண்ணீரிலோ கால் படாத இடத்திலோ போட்டுவிட்டு புதிதாக வேறு கடுகை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே:புரட்டாசி வளர்பிறை பிரதோஷ வழிபாடு
இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு அவர்களுடைய வேலைக்குரிய பண வரவு வரும், பணத்தை சம்பாதிப்பதற்காக எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அந்த முயற்சிகள் வெற்றியைத் தரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.